என்னடா இது இங்கிலாந்துக்கு வந்த சோதனை... விந்தணு இல்லாமல் கஷ்டப்படுகிறார்களாம்… !!
லண்டன்: இங்கிலாந்தில் ஒரு வித்தியாசமான பிரச்சினை தலை விரித்தாடி வருகிறதாம். அதாவது அங்கு ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து விட்டதாம். விந்தனு இல்லாமல் பெரும் சிக்கலில் அந்த நாட்டு ஆண்கள் தவிக்கிறார்களாம்.
பெரும்பாலான ஆண்களிடம் சக்தி குறைந்த விந்தனுவே இருப்பதாகவும் பிரிட்டிஷ் பெர்டிலிட்டி சொசைட்டி எச்சரித்துள்ளது. நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதாகவும் அது கூறுகிறது.
இதன் காரணமாக விந்தனுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம் இங்கிலாந்து மருத்துவமனைகள்.

தரம் குறைந்த விந்தனு
இதுகுறித்து பிரிட்டிஷ் பெர்டிலிட்டி சொசைட்டியின் தலைவர் டாக்டர் ஆலன் பேஸி கூறுகையில், சில மருத்துவமனைகள் தரம் குறைந்த விந்தனுக்களையும் கூட வாங்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருப்பது கவலை தருகிறது.

பெண்களுக்குக் கஷ்டம்
ஆனால் இதுபோன்ற தரம் குறைந்த விந்தனுக்களைக் கொண்டு கருத்தரிக்க முயலும் பெண்கள் பெரும் செலவுகளையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும்.

கொடையாளர்கள் பற்றாக்குறை
நல்ல, சக்தி வாய்ந்த விந்தனுக்களைத் தானம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

விந்தனு தானத்திற்குக் கிராக்கி
சுயமாக கருத்தரிக்க வைக்க முடியாத நிலையில் பல ஆண்கள் இருப்பதால் விந்தனுக்களைத் தானம் பெற முயல்கிறார்கள். ஆனால் விந்தநு தானம் தருவோர் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றார் அவர்.

நான்கில் ஒரு விந்தனு.. வெளிநாட்டிலிருந்து
தற்போது இங்கிலாந்தில் தானமாக பெறப்படும் விந்தனுவில், நான்கில் ஒன்று, வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டதாக உள்ளது.

2005ல் பரவாயில்லை
இது 2005ம் ஆண்டில் பத்தில் ஒன்றாகத்தான் இருந்தது. இப்போது நிலைமை மோசமாகி விட்டது.

அமெரிக்கா – டென்மார்க்கிலிருந்து
பெரும்பாலும் அமெரிக்கா, டென்மார்க்கிலிருந்துதான் விந்தனுக்கள் அதிக அளவில் தானமாக பெறப்படுகிறதாம்.












Click it and Unblock the Notifications