தாய்ப்பாலில் விஷத்தைக் கலந்து குழந்தைக்கு கொடுத்த "பேய்"!
லண்டன்: பெற்ற தாயே தனது குழந்தைக்கு கடந்த 6 மாதங்களாக தாய்ப்பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரோஸ் ஜோன்ஸ் (30). சமீபத்தில் இவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அக்குழந்தையின் உடலில் மெல்ல மெல்லக் கொல்லும் விஷம் கலந்து இருந்ததைக் கண்டு பிடித்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரோஸ் ஜோன்ஸ், கடந்த ஆறு மாதங்களாக டிரக் தெர்மடோல் என்ற வலி நிவாரண மாத்திரையை தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தனது குழந்தையை ஒரேடியாக கொன்று விடாமல் படிப்படியாக கொல்ல திட்டமிட்டு இவ்வாறு செய்ததாக போலீசாரின் விசாரணையில் ரோஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு பிளேமவுத்கம்பைண்ட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சிக்கலான வழக்காக உள்ளது என்றும் அப்பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார்.
கலப்படமே இல்லாதது தாயின் பாசமும், தாய்ப்பாலும் என்பது காலங்காலமாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், பெற்ற தாயே குழந்தைக்கு தாய்ப்பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்த சம்பவம் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பிரச்சினையில் சிக்கியுள்ள ரோஸ் ஏற்கனவே, தனது வீட்டில் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றவர். இதேபோல், வேறொரு நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தினை கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications