பொருளாதாரம் பாதிக்கும்... தீபாவளி, ரம்ஜானை அரசு விடுமுறையாக அறிவிக்க இங்கிலாந்து மறுப்பு
லண்டன்: தீபாவளி மற்றும் ரம்ஜானை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க இயலாது என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. ஆனபோதும், அங்கு தீபாவளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை வழங்கப் படுவதில்லை.
எனவே, இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளிக்கும், இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜானுக்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு சுமார் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 843 இணையவழி வேண்டுகோள்கள் மனுக்கள் அனுப்பப் பட்டன.
அதனைத் தொடர்ந்து இது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கும் படி கமிட்டி ஒன்றிற்கு உத்தரவிட்டது இங்கிலாந்து அரசு. இந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்த அந்த கமிட்டி மேற்கண்ட பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
'தீபாவளி, ரம்ஜான் போன்றவை இங்கு பரவலாக கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த பண்டிகைகளை வங்கி மற்றும் அரசு விடுமுறை தினமாக அறிவிப்பதன் மூலம் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை ஏற்க முடியாது' என விடுமுறை மறுப்பிற்கான காரணமாக கமிட்டி விளக்கமளித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications