சமையலறையில் விழுந்த ரஷ்ய ஏவுகணை.. மூட்டை முடிச்சியோட தலைத்தெறிக்க ஓடாமல் தலைக்கு தில்ல பாத்தீங்களா?
கிவ்: உக்ரைனில் வீட்டு சுவரை துளைத்துக் கொண்டு வெடிக்காத ஏவுகணை ஒன்று சமையலறைக்கு அருகே நின்றிருக்கும் நிலையில் அதன் அருகே சிறிதும் பயமின்றி ஒருவர் ஷேவ் செய்து கொண்டிருக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போரிட்டு வருகிறது. எனினும் உக்ரைன் அரசு ரஷ்யாவிடம் சரண்டர் ஆகாமல் தொடர்ந்து தீரத்துடன் போராடி வருகிறது.
உலக நாடுகள் பல கூறியும் ரஷ்யா போரிடுவதை நிறுத்தவே இல்லை. உக்ரைன் மீது உக்கிரமாக ரஷ்யா போரிட்டு வருகிறது.

18 பேர் பலி
உக்ரைனின் மத்திய பகுதியான கிரிமென்சுக்கில் உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 18 பேர் பலியாகிவிட்டனர். இதுகுறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால் உக்ரைன் அமைச்சர் ஒருவர் 21 பேர் இன்னமும் காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

கண்டனம்
அந்த ஷாப்பிங் மாலில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தீப்பிழம்புகள் எப்படி வருகின்றன என்பதுகுறித்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்த காட்சிகளையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் பதிவிட்டிருந்தார். இந்த தாக்குதலை உலக தலைவர்கள் போர் குற்றம் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video

கொடூர தாக்குதல்
கிரிமென்சுக்கில் நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து அலெக்சாண்டர் கோலோமியட் என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆங்காங்கே ஏவுகணை சப்தம் கேட்டு வரும் நிலையில் கோலோமியட்டின் வீட்டிலும் ரஷ்யாவின் ஏவுகணை துளைத்துக் கொண்டு சமையலறையில் விழுந்தது.

ஷேவ்
நல்ல வேளை அந்த ஏவுகணை வெடிக்கவில்லை. பெரிய அளவு என்பதால் சாய்வாக நின்றுகொண்டிருக்கிறது. இன்னேரம் நாமாக இருந்திருந்தால் தலைத்தெறிக்க ஓடியிருப்போம். ஆனால் கோலோமியட்டோ எந்த பயமுமின்றி அந்த வெடிக்காத ஏவுகணைக்கு அருகேயே நின்று ஷேவ் செய்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் தலைக்கு இவ்ளோ தில் ஆகாது பாஸ்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications