"நடுநிலை வகிப்போம்!" நேட்டோ விவகாரம்.. உக்ரைன் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்! பரபர பின்னணி
கீவ்: உக்ரைன் போர் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பமாக, நேட்டோ அமைப்பில் இணையாமல் நடுநிலை வகிக்க உக்ரைன் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சிலான போரைத் தொடங்க கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் இதுவரை எடுத்த முயற்சி எதுவும் பலன் அளித்ததாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே 4 வாரங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேட்டோ
இந்தப் போர் தொடங்க காரணங்களில் ஒன்று வடக்கு அட்லாண்டிக் ட்ரிட்டி அமைப்பு (நேட்டோ) ஆகும். உக்ரைன் போரைத் தொடங்கும் முன்பு மேற்குலக நாடுகளுக்கும் அதிபர் புதின் சில நிபந்தனைகளை விதித்திருந்தார். குறிப்பாக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தனது வீரர்களை நேட்டோ அமைப்பு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்டவை இதில் முக்கியமானவை. இதை முதலில் உக்ரைன் ஒப்புக் கொள்ளாததே போர் தொடங்க முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.

பேச்சுவார்த்தை
உக்ரைன் நாட்டில் போர் ஒருபுறம் நடைபெறும் நிலையிலும், மறுபுறம் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன்படி இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை குழுவுக்கு இடையே துருக்கியில் இன்று இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்குத் தகுந்த பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கினால், அதற்கு ஈடாக நடுநிலை நிலையை ஏற்க உக்ரைன் சம்மதம் தெரித்துள்ளது. அதாவது உக்ரைன் நேட்டோ அமைப்பிலும் சேராது.

உறுதி
மேலும் உக்ரைனில் நேட்டோ அமைப்பின் ராணுவ தளங்களை அமைக்கவும் அனுமதி தராது என்று உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல உக்ரைன் நாட்டில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் போர் தொடங்கியதில் நேட்டோ விரிவாக்கம் முக்கிய காரணமாக இருந்த நிலையில், இப்போது உக்ரைன் நாட்டின் இந்த நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நேட்டோ சட்டம்
நேட்டோ சட்டத்தின்படி, நேட்டோ உறுப்பு நாடுகள் மீது எதாவது ஒரு நாடு தாக்குதல் நடத்தினால், ஒட்டுமொத்த நோட்டோ நாடுகளும் பதிலடி தரும். இந்தப் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தான் உக்ரைன் இப்போது கேட்கிறது இதன்படி உக்ரைன் நாட்டிற்கு போலந்து, இஸ்ரேல், துருக்கி மற்றும் கனடா ஆகியவை பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் நாடுகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த ஒலெக்சாண்டர் சாலி கூறுகையில், "இவை எங்களுக்கு (உக்ரைன்) மிகவும் அடிப்படையானவை. இந்த முக்கிய விதிகளை நாங்கள் ஒருங்கிணைக்க முடிந்தால், உக்ரைன் நிரந்தர நடுநிலைமையுடன் இருக்க முடியும்" என்றார்.

கிரிமியா
மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில் கிரிமியா குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் தீபகற்பமான கிரிமியாவை கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதை இதுவரை உக்ரைன் ஒப்புக் கொள்ளவில்லை. கிரிமியாவின் நிலை குறித்த ஆலோசிக்க 15 வருட ஆலோசனைக் காலமும் இதில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே கிரிமியா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்
அதேபோல உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் ரஷ்யா எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாது என்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தான், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான விண்ணப்பத்தில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போரில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வரும் நாட்களில் போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications