பச்சை படுகொலை முயற்சி.. உக்ரைன் அதிபருக்கு 3 முறை குறி வைத்ததா ரஷ்யா.. எப்படி தப்பித்தார்.. பகீர்
உக்ரைன் அதிபரை கொல்ல 3 முறை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது
மாஸ்கோ: உக்ரைன் அதிபரை தாக்கி கொலை செய்ய, 3 முறை முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், உக்ரைன் அதிகாரிகள் அலர்ட்டாக செயல்பட்டதால் இந்த கொலை முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. காரணம், உக்ரைனைவிட ரஷ்யா ஆயுதப்படையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.. படை பலம் அதிகம்.
எனினும், உக்ரைனில் பெரும்பாலான ஆண்கள் ராணுவப்பயிற்சி பெற்றிருப்பதால், ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறார்கள்..

உக்ரைன்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியானது.. ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பானது, 400 பேரை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளதாகவும், இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது..

அதிபருக்கு குறி
இந்த 400 பேரும் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, உக்ரைன் அதிபரோடு சேர்த்து அவரது அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டதுடன், இதற்காகவே அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.. இதற்கெல்லாம் காரணம் ரஷ்ய அதிபர் புதின்தான் என்றும் கூறப்பட்டது..

பேச்சுவார்த்தை
அதாவது ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, இன்னொரு பக்கம் உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்புவதா என்று காட்டமான கேள்விகளை தலைவர்கள் எழுப்பினார்கள்.. உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷியா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த செய்தி மேலும் பரபரப்பை கிளப்பியது.. அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.. அதாவது உக்ரைன் அதிபரை கொல்வதற்காக நடந்த 3 முயற்சிகளை, அந்த நாட்டு அதிகாரிகளே திறன்படி முறியடித்துள்ளார்களாம்.

கொலை முயற்சி
இந்த தகவலை தி டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.. அதாவது, உக்ரைன் அதிபரை கொலை செய்வதற்காக வாக்னர் குழுவானது, சிசின் போராளிகள் குழுவுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.. இவர்கள் அனைவருமே உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டதாம்.. ஆனால், உக்ரைன் தாக்குதலை விரும்பாத ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு சேவை பிரிவின் அதிகாரிகளே, உக்ரைன் அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்..

அலர்ட்
அதற்கு பிறகுதான் உக்ரைன் அதிகாரிகள் அலர்ட் ஆகி உள்ளனர்.. உடனடியாக கீவ் நகருக்கு பறந்துள்ளனர்.. அங்கு கடந்த சனிக்கிழமையன்று சிசின் குழுவை சேர்ந்தவர்களை சுட்டு தள்ளி உள்ளனர்.. மேலும் எங்கெல்லாம் வாக்னர் குழுவினரின் நடமாட்டம் தென்பட்டதோ, அங்கெல்லாம் அவர்களின் கொலை முயற்சிகளை முறியடித்து விட்டோம் என்று உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எஸ்கேப்
இப்படி ஒரு கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்ததுமே, அதிபரை தாங்கள் பத்திரமாக அழைத்து செல்வதாக அமெரிக்கா தெரிவித்தும் அதற்கு தாங்கள் மறுத்துவிட்டு, கீவ் நகரிலேயே பாதுகாப்பாக தங்க வைத்தோம் என்று அவர் மேலும் சொல்கிறார்.. இந்த துணிச்சலான நடவடிக்கைதான் பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.. இதற்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இதை பற்றி சொல்லும்போது, தைரியம், நேர்மை, சுதந்திரத்திற்கான அடையாளமாக ஜெலன்ஸ்கி திகழ்கிறார் என்றார்..

நான்தான் முதல் குறி
ஆனால், ரஷ்யாவின் முதல் குறியாக நான் தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த புதின் முன்வர வேண்டும் என்றும் உக்ரைன் சரணடைந்து விடும் என யாராவது நினைத்தால், அவர் உக்ரைனை பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கவில்லை என்றே அர்த்தம் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications