மோடியை கண்டதும் உணர்ச்சிவசப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.. ஆசுவாசப்படுத்திய பிரதமர்!

Subscribe to Oneindia Tamil

கீவ்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது உக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு 2 ஆண்டுகளுக்கு மேலாகப் போர் தொடரும் நிலையில், மோடியின் இந்த விசிட் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடியைப் பார்த்தவுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எமோஷ்னல் ஆனார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு போலந்து நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் உக்ரைன் நாட்டிற்குச் சென்றிருக்கிறார்.

Narendra Modi Ukraine Russia

உக்ரைனில் பிரதமர் மோடி: 2 ஆண்டுகளாகப் போர் நடக்கும் உக்ரைன் நாட்டிற்குப் பிரதமர் மோடி சென்றுள்ளது ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 20 மணி நேரம் ரயிலில் பயணித்து பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் தலைநகர் கீவ் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அங்கிருந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர்.

பிறகு பிரதமர் மோடி, உக்ரைன் போரில் உயிரிழந்தோருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கண்காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கு அதிபர் ஜெலென்ஸ்கி அவரை வாசலிலேயே சென்று வரவேற்றார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.. அப்போது அவர் சற்றே எமோஷ்னலாகிவிடவே, அவரை பிரதமர் மோடி ஆசுவாசப்படுத்தினார்.

உணர்ச்சிவசப்பட்டார்: அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தியாகிகள் கண்காட்சியைப் பார்வையிட்டார். அதிபர் ஜெலென்ஸ்கி போரின் கொடூரத்தை விவரித்தார். பிரதமர் மோடியைப் பார்த்தவுடன் எமோஷ்னலான ஜெலென்ஸ்கி, அவரை கட்டி தழுவி வரவேற்ற வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

ரயில் பயணம்: பிரதமர் மோடி கடந்த மாதம் தான் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்று அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்துப் பேசியிருந்தார். இதற்கிடையே 6 வாரங்களில் இப்போது மோடி உக்ரைன் நாட்டிற்குச் சென்றுள்ளார். எனவே, இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முதலில் போலந்து நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடி, 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' மூலம் உக்ரைன் சென்றார். உக்ரைன் நாட்டை பொறுத்தவரை போர் காரணமாக அங்கே விமான நிலையங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கிறது. சிறப்பு விமானங்கள் மூலம் அங்குச் செல்வதும் ரிஸ்க். இதனால் பிரதமர் மோடி சுமார் 20 மணி நேரம் ரயிலில் பயணித்து உக்ரைன் சென்றடைந்தார். உக்ரைன் நாட்டில் சில மணி நேரம் மட்டுமே பிரதமர் மோடி இருந்தாலும், இது வரலாற்றில் மிக முக்கிய பயணமாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+