மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேச்சு விளம்பர உரையாகவே இருந்தது: தடதடக்கும் ருமேனிய மேயர்!
ருமேனியா: நான் தான் பேசுவேன் என்று கூறிய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் பேச்சு, விளம்பர உரையாகவே இருந்தது என்று ருமேனிய மேயர் கூறியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வருவதால், அங்கிருக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது இந்திய அரசு.
உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திர்களை ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்திய அரசு மீட்டு வருகிறது.

உக்ரைனில் இந்தியர்கள்
உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவம் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு சென்றுள்ளார்கள். தற்போது உக்ரைனில் போர் நடப்பதால் அங்குள்ள மாணவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

விமானம்
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். இதில் இந்திய விமானப்படையும் பங்கெடுத்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆபரேஷன் கங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்
இந்திய மாணவர்களுக்கு உதவிடவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வரும் பணியை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தற்போது ருமேனியாவில் இருக்கிறார்.

வாக்குவாதம்
ருமேனியாவில் இந்திய மாணவர்கள் ருமேனிய மேயர் தலைமையில் தங்கி இருந்தனர். அப்போது, அந்த இடத்துக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்றார். அந்தநிலையில், மாணவர்களிடம் இந்தியா எப்போது திரும்புவார்கள் என ருமேனியா மேயர் பேசி வந்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நான் தான் பேசுவேன் என்றும், நான் என்ன பேசுவேன் என்று நான் தான் முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேயர்
இதற்கு ருமேனிய மேயர், இந்த மாணவர்களை நான் தான் பாதுகாத்தேன். அவர்களுக்கு தேவையான உணவு, உடை அனைத்தையும் தந்தேன். நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என்று பதிலளித்துள்ளார். இதற்கு இந்திய மாணவர்கள் கைதட்டி பாராட்டியுள்ளனர். ருமேனிய மேயரைப் பாராட்டி, இந்திய அமைச்சர் தலைகுனிந்ததுபோன்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
Recommended Video

விளக்கம்
இந்த நிலையில், ருமேனியாவின் ஸ்னாகோவ் பிராந்திய மேயர் இதுகுறித்து தற்போது பேசியிருக்கிறார். அதில், "போர் காரணமாக உக்ரைனிலிருந்து தப்பித்து 157 இந்திய மாணவர்கள் ஸ்னாகோவ் பிராந்தியத்துக்கு வந்தனர். ஸ்னாகோவ் பிராந்தியத்தின் குடிமக்களே அனைத்தையும் மாணவர்களுக்கு வழங்கினர். இந்த நிலையில், இந்திய அமைச்சர் அந்த அறைக்கு கேமராக்களுடன் வருகை தந்தார். அவர் மாணவர்களிடம் தனது விளம்பர உரையைத் தொடங்கினார். போர் பூமியை விட்டு வெளியேறி வீட்டிற்குச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு ஆறுதலாக எந்த வார்த்தையும் கூறவில்லை.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications