"ஹை அலர்ட்".. தயாராக இருங்கள்.. அணு ஆயுத படைக்கு உத்தரவிட்ட புடின்.. பதற வைக்கும் ரஷ்யா பிளான்?
மாஸ்கோ: உக்ரைன் உடன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய படைகளின் அணு ஆயுத பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் மட்டும் தனித்து விடப்பட்டது. ஆனால் தற்போது உக்ரைனுக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகள் உதவி வருகின்றன.
ஆயுதங்கள், பீரங்கிகள், குண்டுகள், போர் விமானங்கள், ஏவுணைகள் என்று பல உதவிகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிரான போரில் தற்காலிகமாக தாக்கு பிடித்து வருகிறது.

அணு ஆயுதம்
ஆனால் உக்ரைன் போரில் நேரடியாக வேறு நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. இது சர்வதேச அளவில் முழு முதற் போருக்கு வழி வகுக்கும் என்பதால் உலக நாடுகள் எதுவும் நேரடியாக இந்த போரில் பங்கேற்கவில்லை. வேறு நாடுகள் இந்த போரில் நேரடியாக கலந்து கொள்ளும் பட்சத்தில் அது சர்வதேச அளவில் உலகப்போராக வெடிக்கும் அபாயம் உள்ளது. அது வரும் நாட்களில் அணு ஆயுத போருக்கும் வித்திடும்.

அணு ஆயுத மிஸைல் சோதனை
ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்தில்தான் ரஷ்யா உக்ரைன் அருகே கடல் எல்லையில் மிஸைல் சோதனை நடத்தியது. ஹைப்பர் சோனிக், சூப்பர் சோனிக் மிசைல்களை வைத்து சோதனை செய்தது. ரஷ்யா சோதனை செய்த ஏவுகணைகள் எல்லாமே அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகும். இந்த அணு ஆயுதத்தை தாங்கி சென்று தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யா சரியாக உக்ரைன் எல்லையில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்தது.

என்ன உத்தரவு
இந்த நிலையில்தான் உக்ரைன் உடன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய படைகளின் அணு ஆயுத பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். அதாவது படைகள் தயார் நிலையிலும், ஹை அலர்ட்டிலும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ராணுவ ஜெனரலுக்கு இதற்கான உத்தரவு சென்றுள்ளது. களத்தில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு தயாரான நிலையில் படைகள் இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதிர்ச்சி
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஐநாவின் அணு ஆயுத கண்காணிப்பு மையம் இந்த முன்னேற்றங்களை கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அந்த அமைப்பு அவசர கூட்டம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. நேட்டோ தலைவர் ஜென்ஸ், ரஷ்யாவின் இந்த முடிவை முட்டாள்தனமானது, ஆபத்தானது என்று குறிப்பிட்டு இருக்கிறார். உலக நாடுகள் இடையே ரஷ்யா அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரஷ்யா ஆயுதம்
ரஷ்யாவிடம் 5 ஆயிரத்திற்கும் அதிகமான அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் பல ஆயுதங்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் மிஸைல் திறன்களை கொண்டது ஆகும். இந்த ஏவுகணைகள் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த போரில் ரஷ்யா தோல்வியை நெருங்கும் பட்சத்தில் அல்லது நேட்டோ நாடுகள் போரில் கலந்து கொள்ளும் பட்சத்தில், அல்லது ரஷ்யா போரை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர நினைக்கும் பட்சத்தில் அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications