"நாங்கள் உறுதியாக உள்ளோம்.. ஆனால்!" போர் தொடரும் நிலையில்.. உக்ரைன் பரபர கருத்து! முழு பின்னணி
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் சில நாட்களில் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் கருதினர்.
இருப்பினும், யாரும் எதிர்பாராத வகையில் போர் பல நாட்களாகத் தொடர்கிறது. ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் துணிச்சலாகப் போராடி வரும் நிலையில், பல பகுதிகளில் இரு நாடுகளுக்கு இடையே சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் போர்
போர் தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி, ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இரு தரப்பு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் ராணுவம் அதற்குத் தந்து வரும் பதிலடியால் பல பகுதிகளில் ரஷ்யா ராணுவம் ஸ்தம்பித்துள்ளது.

பேச்சுவார்த்தை
ஒரு புறம் போர் தொடரும் சூழலிலும், மறுபுறம் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. இந்நிலையில், ரஷ்யா உடனான பேச்சுவார்த்தை மிகவும் கடினமானதாக உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேநேரம் போர் நிறுத்தத்தில் தனது நிபந்தனைகளை ஒருபோதும் வாபஸ் பெறப்போவது இல்லை என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா உடன் நடைபெறும் பேச்சுவார்த்தை செயல்முறை மிகவும் கடினமாக உள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

எங்களுக்கு தெரியாது
இது தொடர்பாக டிமிட்ரோ குலேபா மேலும் கூறுகையில், "பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் உக்ரைன் குழு தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. எங்கள் கோரிக்கைகளை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. நாங்கள் முதலில் கேட்பது போர் நிறுத்தம் தான். பாதுகாப்பு உத்தரவாதங்கள், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை குறித்தும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், ரஷ்யாவுடன் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அடுத்து பேச்சுவார்த்தையில் என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியாது. குறிப்பாக, உக்ரைன் நாட்டில் உக்ரைனிய மொழி மட்டுமே அரசின் அலுவல் மொழியாக இருக்கும். அதை மாற்றிக் கொள்ள முடியும்" என்றார்.

நேர்மாறான கருத்து
இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாகத் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் சமீபத்தில் கூறி இருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக கருத்தை இப்போது உக்ரைன் அமைச்சர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை தொடர்பாகத் துருக்கியின் கருத்து உண்மையல்ல என்ற போதிலும், துருக்கியின் அரசியல் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகவும், இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கும் நடவடிக்கைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
Recommended Video

குற்றச்சாட்டு
உக்ரைன் நாட்டில் ரஷ்ய மொழி பேசுபவர்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், ரஷ்யர்கள் குறி வைத்து இனப்படுகொலை செய்வதும் போரை ஆரம்பிக்க ஒரு காரணமாக ரஷ்யா குறிப்பிட்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் உக்ரைன் நாட்டின் அலுவல் மொழியாக உக்ரைன் மொழி மட்டுமே தொடரும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications