அப்படியே பாய்ந்து வந்த ரஷ்ய ஏவுகணைகள்! உக்ரைன் ரயில் நிலையத்தில் தாக்குதல்! 35 பேர் பலி.. பரபர தகவல்
கீவ்: உக்ரைன் நாட்டில் விரைவில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்குள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.
கடந்த பிப். இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இந்தப் போர் இப்போது ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்து மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், அதில் பெரியளவில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.

உக்ரைன் தாக்குதல்
இந்தச் சூழலில் கடந்த வாரம் துருக்கியில் இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, நேட்டோ அமைப்பில் சேரும் முடிவைக் கைவிட்டு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. அதேபோல ரஷ்யாவும் தலைநகர் கீவ் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து தனது ராணுவத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டது.

இரண்டு ஏவுகணைகள்
இதன் காரணமாக உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் உக்ரைனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தைக் குறி வைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. மொத்தம் இரண்டு ஏவுகணைகள் இந்த ரயில் நிலையத்தைத் தாக்கி உள்ளது.

30 பேர் பலி
இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாத்து, பத்திரமாக வெளியேற்ற உக்ரைன் அரசு இந்த ரயில் நிலையத்தைத் தான் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யத் தாக்குதலில் இருந்து தப்பிப் பாதுகாப்பான இடங்களுக்குப் பொதுமக்கள் செல்ல முயன்ற போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்யா விளக்கம்
மொத்தம் இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் ரயில் நிலையத்தைத் தாக்கியதை உக்ரைன் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கின. இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதல் மற்றும் உயிர்ச்சேதம் குறித்த ரஷ்யா தரப்பில் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். ரஷ்யாவை எந்தவொரு வரம்புகளும் இல்லாத தீய நாடு என்று சாடியுள்ள என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "அவர்கள் திட்டமிட்டு பொதுமக்களை அழித்து வருகின்றனர். முழுக்க முழுக்க தீய நடவடிக்கை இது. ரஷ்யாவுக்கு உரியத் தண்டனை வழங்க வேண்டும். இல்லையென்றால் இது உக்ரைன் உடன் நிற்காது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications