உக்ரைன் - ரஷ்யா இடையே அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை.. துருக்கியில் இன்று நடைபெறுகிறது

உக்ரைன், ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது

Subscribe to Oneindia Tamil

துருக்கி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் ஒருமுடிவுக்கு வராத நிலையில், இரு நாடுகள் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை துருக்கியில் நடைபெறுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா விடாமல் போர் தொடுத்து கொண்டிருக்கிறது.. பல நாட்டு தலைவர்கள் அறிவுறுத்தியும், எச்சரித்தும் போரை ரஷ்யா நிறுத்தவில்லை..

இந்த வெறித்தனமான தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் பேரழிவு அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.. அப்பாவி மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு அந்நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

 கலக்கம்

கலக்கம்

தியேட்டர்கள், ரெயில்வே சுரங்க பாதை, பதுங்கு குழிகள் என பல இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.. ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் போர் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.. பெலாரசில் 3 கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா இடையே மறுபடியும் துருக்கியில் 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது..

முடிவு வருமா?

முடிவு வருமா?

இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தைகள் எல்லாமே மிகவும் கடினமானவை என்று உக்ரைன் விமர்சித்து கொண்டிருந்த நிலையில், துருக்கியில் நடத்தப்போகும் இந்த பேச்சுவார்த்தையிலாவது திருப்பம் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இரு நாடுகள் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெறுகிறது.

உக்ரைன்

உக்ரைன்

முன்னதாக, தாமதமின்றி அமைதி திரும்புவதற்காக, உக்ரைனின் நடுநிலைமை மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாக அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த தாங்கள் தயாராகவே இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அறிவித்திருந்தார்.. அதாவது, ரஷ்ய அதிபரை நேருக்கு நேர் சந்திப்பதன் மூலம் மட்டுமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்

ரஷ்யா விருப்பம்

ரஷ்யா விருப்பம்

ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்வாய் இதை பற்றி சொல்லும்போது, இரு அதிபர்களும் சந்திக்க முடியும்.. ஆனால், அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்தும் தெளிவு பெற்ற பின்னர் இந்த சந்திப்பு அவசியம் என்றார். இந்த 2 நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், சாத்தியமான ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே, 2 நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச முடியும், அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்குமான தீர்வுகள் பற்றிய தெளிவு கிடைத்தவுடன் சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்வாய் இதை பற்றி சொல்லும்போது, இரு அதிபர்களும் சந்திக்க முடியும்.. ஆனால், அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்தும் தெளிவு பெற்ற பின்னர் இந்த சந்திப்பு அவசியம் என்றார். இந்த 2 நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், சாத்தியமான ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியபின்னரே, 2 நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச முடியும், அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்குமான தீர்வுகள் பற்றிய தெளிவு கிடைத்தவுடன் சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார்.

விருப்பம்

விருப்பம்

இந்த போரின் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பை சந்தித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக கீவ் நகர அரசு அதிகாரிகள் சொல்லும்போது, உக்ரைனில் தகவல் தொடர்பு சேவை கடுமையாக செயலிழந்துள்ளது, இதற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்குமோ என்ற ரீதியில் விசாரித்து வருகிறோம்... நேற்று காலை தொடங்கிய மின்தடை மாலை வரை நீடித்தது" என்றனர்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த தாக்குதலால் இதுவரை சுமார் 3.8 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.. பலர் காயமடைந்துள்ளனர்.. இத்தகையை பேரழிவுகள் ஏற்பட்ட நிலையில்தான், இன்றைய தினம் நடக்க போகும் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+