ஸ்ஸ்ஸப்பா... ஒரே புழுக்கமா இருக்கே.. பெண் செய்த அந்த பகீர் காரியம்.. விக்கித்து போன மக்கள்!

ஓடும் பிளைட்டில் பெண் செய்த பகீர் காரியம் வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

அங்காரா: ஒரு பெண்ணுக்கு ரொம்ப புழுக்கமாக இருந்திருக்கிறது.. அதற்காக அவர் செய்த செயலை நினைத்து துருக்கி நாடே ஷாக்கில் உள்ளது. நட்டநடுவானில், மெல்ல தரையிறங்கும் நேரத்தில், ஃபிளைட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக ஃபிளைட்டில் போவது என்றாலே ரொம்ப கஷ்டமான ஒன்று.. ஜாக்கிரதையான பயணமும் கூட.. அதிலும் அந்த பிளைட்டில் ஏறி, உள்ளே உட்கார்ந்து பிறகு பத்திரமாக தரையிறங்குவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும்.. ஒரு ஃபிளைட் கொஞ்சம் லேட்டாக தரையிறங்கினால்கூட டென்ஷன் எகிறிவிடும்.

Ukraine woman takes a walk on aircrafts wings to get some air, video goes viral

ஆனால், இந்த ரிஸ்க் எல்லாம் ஒரு பெண்ணுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரிதான்.. தன் சொந்த ஊருக்கு போவதற்காக அந்த பெண் ஃபிளைட்டில் ஏறி உள்ளார்.. அவருடன் தன் 2 குழந்தைகளையும் அழைத்து சென்றிருந்தார்.

இறுதியில் பிளைட் தரையிறங்க தயாரானது.. அப்போது, சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்குதிடீரென புழுக்கம் ஏற்பட்டது.. ஜன்னல்கள் எல்லாம் வழக்கம்போல அடைத்திருந்தாலும், அவருக்கு புழுக்கமும், வெக்கையும் அதிகமாகிவிட்டது.. அதனால், டக்கென எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக வெளியே வந்துவிட்டார்.

வெளியே வந்தவர், ஃபிளைட்டின் இறக்கையில் உட்கார்ந்து கொண்டார்.. இதை பார்த்ததும் உள்ளே இருந்த சக பயணிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. சிலர் இதை வீடியோவும் எடுத்து விட்டனர்.. அந்த பிளைட் அப்போதுதான் தரையிறங்க வேண்டிய நிலையில் இருந்தது.. ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத அந்த பெண் கொஞ்ச நேம் றெக்கையில் நின்றுவிட்டு, திரும்பவும் பிளைட்டுக்குள்ளேயே போய் உட்கார்ந்து கொண்டார்.

Ukraine woman takes a walk on aircrafts wings to get some air, video goes viral

ஆனால் பிளைட் தரையிறங்கியதுமே உக்ரைன் ஏர்போர்ட் அதிகாரிகள் செம கடுப்பாகிவிட்டனர்.. இனிமேல் உக்ரைன் வழியாக போகும் எந்த பிளைட்டிலும் அந்த பெண் ஏறவே கூடாது என்று உத்தரவும் பிறப்பித்தனர்..
"நாங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா இறங்க ரெடியாகி கொண்டிருந்தோம்.. அப்போதான் அந்த பெண் றெக்கை மீது நடந்து கொண்டிருந்தார்.. அவரை பார்த்து எங்களுக்கு மட்டுமில்லை, அவருடைய 2 குழந்தைகளும் ஷாக் ஆகிவிட்டனர்" என்று சக பயணிகள் அதிர்ச்சியுடன் சொன்னார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+