For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்ய படைகளை தடுக்க.. பாலத்தை தகர்க்க மனித வெடிகுண்டாக மாறிய உக்ரைன் வீரர்.. உடலி சிதறி பலியான சோகம்

Google Oneindia Tamil News

கீவ்: ரஷ்யாவின் பீரங்கி வண்டிகள் உக்ரைனுக்குள் நுழைவதை தடுப்பதற்காக பாலத்தை வெடிவைத்து தகர்த்த உக்ரைன் நாட்டு வீரர் வீரமரணம் அடைந்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் 3வது நாள் போர் இன்றும் தொடர்ந்து வருகிறது. தரைப்படை, கப்பற்படை, விமானப்படைகளை பயன்படுத்தி ரஷ்யா, நான்கு புறங்களில் இருந்தும் உக்ரைனை தாக்கி வருகிறது.

இதில் ரஷ்யா, உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். அத்துடன் ரஷ்யாவின் வான்வழி தாக்குதலுக்கு உக்ரைனின் அப்பாவி மக்களும் பலியாவதாக அந்தாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். இந்நிலையில் தான் ரஷ்யாவின் படைகளை தடுக்க உக்ரைன் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்த செய்தி வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சரணடைய வேண்டாம்...ரஷ்யா நிறுத்தாதவரை ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை - ஜெலன்ஸ்கி சரணடைய வேண்டாம்...ரஷ்யா நிறுத்தாதவரை ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை - ஜெலன்ஸ்கி

 ரஷ்யாவை தடுக்க...

ரஷ்யாவை தடுக்க...

உக்ரைன் மரைன் பட்டாலியன் பிரிவில் பொறியாளராக பணியாற்றியவர் விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச். ரஷ்யா போரை துவங்கியபோது இவர் உக்ரைனின் தெற்கு மாகாணமான கெர்சனில் உள்ள ஹெனிசெஸ்க் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பான கிரிமியா பகுதியையும், உக்ரைனையும் இணைக்கும் வகையில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தின் வழியே ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைய முயன்றன.

 பாலம் தகர்ப்பு

பாலம் தகர்ப்பு

பீரங்கி வண்டிகளுடன் வந்த ரஷ்யாவின் படைபலமானது, உக்ரைனின் படைபலத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் உக்ரைன் வீரர்கள் செய்வதறியாது தவித்தனர். ரஷ்ய வீரர்களை தடுக்க உக்ரைனிடம் உள்ள ஒரு வழி என்னவென்றால் ஹெனிசெஸ்க் பாலத்தை தகர்ப்பது மட்டும் தான். மாற்றுவழி எதுவுமில்லை. இதையடுத்து உயரதிகாரி உத்தரவை தொடர்ந்து விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் தாமாக முன்வந்து பாலத்தை வெடிவைத்து தகர்த்தார்.

 வீரர் வீரமரணம்

வீரர் வீரமரணம்

அப்போது எதிர்பாராத விதமாக விட்டலி ஸ்காகுனும் உடல் சிதறி வீரமரணம் அடைந்தார். இது உக்ரைன் ராணுவத்தை கண்கலங்க செய்தது. ஆனால் உயிர் தியாகம் செய்து ஏராளமான மக்களை விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் காப்பாற்றியதாக அவர் பெருமை கொண்டார்.

 பல கிலோமீட்டர்...

பல கிலோமீட்டர்...

ஏனென்றால் ஹெனிசெஸ்க் பாலத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் வெறும் 30 மைல் தொலைவில் தான் உள்ளது. இந்த பாலத்தின் வழியே ரஷ்யாவின் ராணுவம் உக்ரைனுக்குள் நுழைந்தால் அவர்கள் எளிதில் கீவ் நகரை அடைந்து இருக்கலாம். ஆனால் அவர் உயிர்தியாகம் செய்து பாலத்தை தகர்த்ததன் மூலம் ரஷ்யா பல கிலோமீட்டர் சுற்றி உக்ரைனுக்குள் நுழைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது ரஷ்ய ராணுவத்துக்கு கடினமானதாக இருக்கும்.

 அஞ்சமாட்டோம்

அஞ்சமாட்டோம்

இதற்கிடையே விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் வீரமரணம் குறித்து உக்ரைன் ராணுவம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "நம் நாடு கடினமாக நாட்களை கடந்து வருகிறது. எதிரிகளை தனியாக சந்தித்த விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் வீரமரணம் அடைந்துள்ளார். ரஷ்ய படைவீரர்களே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போது இந்த பூமி உங்களது காலடியில் எரியலாம். நாங்கள் அஞ்சமாட்டோம். வாழும் வரை போராடுவோம். நாங்கள் உயிருடன் இருக்கும் வரை போராடுவோம்'' என கூறப்பட்டுள்ளது.

விருது

விருது

மேலும் உக்ரைனுக்காக உயிர்தியாகம் செய்த வீரருக்கு வீரச்செயலுக்கான விருது வழங்கப்படும் என ராணுவ உயரதிகாரிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Ukrainian marine sacrifices himself to blow up bridge to stop russian military.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X