பூமியில் பஞ்சம் அதிகமாக இருக்கும் இடம் 'காசா'.. ஐநா கவலை! பட்டிணியில் லட்சக்கணக்கான உயிர்கள்!
வாஷிங்டன்: இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக காசாவில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உலகில் பஞ்சம் அதிகம் உள்ள இடம் காசா தான் என்று ஐநா மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் காலங்காலமாக இருந்து வருகின்றன. இதற்கு முன்னர் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்புகளுக்கு ஆதராங்களும் இருக்கின்றன. இப்படியான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை பாலஸ்தீன மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் பல அமைப்புகளை உருவாக்கின. இவை தங்களை பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் என்று கூறிக்கொள்கின்றன. ஹமாஸும் இதில் ஒன்று.

இந்த அமைப்பு ஆயுதம் தாங்கிய போராட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. எனவே ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அமெரிக்க ஆதரவு நாடுகள் அடையாளப்படுத்தியுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதில் 1300 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கு எதிராக இஸ்ரேல் தீவிரமான போரை மேற்கொண்டது. கடந்த 20 மாதங்களாக நடந்த வரும் இந்த போரில் சுமார் 53,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸை அழிப்பதுதான் நோக்கம் என்று இஸ்ரேல் ராணுவம் சொல்லிக்கொண்டாலும், இதில் பொதுமக்கள்தான் அதிக அளவில் உயிரிழந்தனர்.
எனவே போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட, ஹார்வார்ட் போன்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் அமெரிக்காவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. இதனையடுத்து போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்தியது. இப்படியான சூழலுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இதனை அடுத்தடுத்த கட்டத்திற்கு இஸ்ரேல் நகர்த்தவில்லை.
எனவே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு தற்போது மீண்டும் போர் நடந்து வருகிறது. முழு காசாவையும் கைப்பற்றுவதுதான் இஸ்ரேலின் நோக்கம் என்று, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொக்கரித்துள்ளார். இது அந்நாட்டு ராணுவத்தின் தாக்குதலில் எதிரொலித்திருக்கிறது. இந்த போர் காசாவில் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் இருந்து உணவு பொருட்கள் காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அதை இஸ்ரேல் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்திருக்கிறது. இதுதான் பஞ்சத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த சூழலில்தான் உலகில் மோசமான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதி காசா என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜென்ஸ் லார்கே, ஜெனிவாவில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதை கூறியுள்ளார். காசாவில் 100% மக்களும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
-
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications