இது மிகப்பெரிய குற்றம்.. காசா மீதான இஸ்ரேல் போரில் எண்ணெய் ஊற்றும் அமெரிக்கா.. கடுகடுத்த ஐநா
டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் போரை நீட்டித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது மனிதாபிமான குற்றச் செயல் என ஐநா தலைவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் முன்மொழியப்படும்போது, அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது மனிதாபிமான குற்றம் என ஐநா தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ராணுவ ஆய்வாளரான சீன் பெல் சமீபத்தில் வெளியிட்டிருந்த சில தகவல்கள்தான், ஐநா தலைவர்களின் விமர்சனத்திற்கு முக்கிய காரணம். அதாவது, கடந்த ஆண்டு மட்டும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கியுள்ளதாக சீன் பெல் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸை அழிக்கும் வரை போர் ஓயாது என்று கூறியிருக்கிறார். அவருக்கு உதவும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை சப்ளை செய்து வருவது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
போர் காசா மக்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாலஸ்தீனத்திற்கு அண்டை நாடாக இருக்கும் எகிப்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் முக்கிய வருவாய் கடல்வழி வாணிபம்தான். ஆனால் போர் காரணமாக இது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் அமெரிக்க டாலருக்கு நிகரான எகிப்து ரூபாயின் மதிப்பும் சரிந்துக்கொண்டே வருகிறது. மட்டுமல்லாது, எகிப்தின் ராஃபா எல்லையில், காசா மக்கள் அகதிகளாக குவிந்திருப்பதால் அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் எகிப்து தலையில் வந்து விடிய இருக்கிறது.
அதேபோல இந்த போரில் ஈரானும் நுழைந்திருப்பதால், மத்திய தரைக்கடல் நாடுகள் முழுவதும் போரில் மறைமுகமாக பங்கெடுத்துள்ளன. இது சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளையும் பாதிக்கும். எனவே போரை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. இதற்கு அமெரிக்க ஒத்துழைக்க வேண்டும்.
பின்னணி: பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications