இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம்! ஐ.நா அவகாசம் வழங்கியது
ஜெனிவா: போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு மேலும் 2 வருடங்கள் அவகாசம் வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்ட் ராட் அல் ஹுசைனால் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் முக்கியமானதொரு விஷயத்தை இலங்கையிடம் வலியுறுத்தியிருந்தார். அது இந்த விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் புலனாய்வாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது.
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், மொன்டெனெக்ரோ, மெசடோனியா ஆகிய நாடுகள் புதியதொரு தீர்மானத்தைத் தாக்கல் செய்தன
அந்த தீர்மானத்தில், விசாரணையை நிறைவேற்ற மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும், கலப்பு விசாரணை (பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை) என்பதற்குப் பதில் இலங்கை அரசின் சம்மதத்துடனான விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கானா நாடு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே விசாரணை நடத்த மேலும் 2 ஆண்டுகள் இலங்கைக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போன்றோர் கோரிக்கைவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications