கொரோனா மட்டுமில்லங்க.. மனித குலத்திற்கு பல சிக்கல் இருக்கு.. ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: கொரோனா, ஒமிக்ரான்,காலநிலை மாற்றம், மோதல் ஆகியவற்றால் உலகம் மோசமாக உள்ளதாக‌ என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகமெங்கும் பரவத் தொடங்கி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

 UN Secretary António Guterres says that the world is in danger!

கொரோனாவால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையிலும், கடந்த ஆண்டுகளில் சண்டைகள் பெரிய அளவில் நடந்து பெரிய மோதல்களாக நடந்திருக்கிறது. இந்த மோதல்களால் நிறைய அசம்பாவிதங்கள் நடந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான், வடகொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.நா தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வந்தது. உலகில் தொடர்ந்து மோதல்களும் வன்முறையும் அதிகரித்துவருவதற்கு ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனா, தடுப்பூசி குறித்தும் தொடர்ந்து உலக நாடுகளை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''கொரோனாதொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றால் உலகம் முழுவதும் பல இடங்களில் மோதல்கள் அதிகரித்திருக்கிறது. கடந்த‌ ஐந்து ஆண்டுகளில் உலகம் முன்பைவிட‌ மோசமாகிவிட்டது.

இந்த மோதல்களை குறைக்க என்னால் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க முடியும். ஆனால் அந்த அதிகாரம் என்னிடம் இல்லை. மோதல்களை விரைவில் நிறுத்த வேண்டும். அந்த சூழ்நிலையில் தான் தற்போது நாம் இருக்கிறோம். இதை நான் ஆழமாக நம்புகிறேன். சமாதான முயற்சிகளில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கு முடிவு கட்டுவதும் அவசியம்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மனித உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், பெண்களின் வேலை மற்றும் கல்விக்கான உரிமைகளில் கவனம் செலுத்த தாலிபான்கள் முயற்சி செய்ய‌ வேண்டும். ஆப்கானிஸ்தானின் பல்வேறு மக்களை உள்ளடக்கிய அரசாங்கத்தை தலிபான்கள் உருவாக்க வேண்டும்.கோவிட் தொற்று உள்ளிட்டவை விரைவில் சரியாகும் என்று நினைக்கிறேன்'' என்று ஐ.நா செயலாளர் கவலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+