ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஜனநாயக நாடுகள் இடம்பெற வேண்டும்... ஜி-4 மாநாட்டில் மோடி வலியுறுத்தல்
நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் இடம்பெற வேண்டும் என்று ஜி-4 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை குறிப்பிட்ட கால வரையறைக்குள் விரிவுப்படுத்த வேண்டும் எனவும் ஜி-4 மாநாடு வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலினா மார்க்கெல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய அணுமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உள்ளிட்ட அமைதிக்கு பாடுபடும் ஜனநாயக நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற வேண்டும் என்றும், அதற்கான முயற்சியின் தொடக்கமாக இக்கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதில் உறுதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சட்டப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான அமைப்பாக செயல்படுத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் விவகாரத்தில் மிக அழுத்தமாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்துவதாகவும் ஜி 4 நாடுகள் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.பாதுகாப்பு அவையில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பை விரிவுப்படுத்தி, நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் முயற்சித்து வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications