காஷ்மீர் விவகாரம் 2 நாட்டு பிரச்சனை.. பேசி தீர்க்க வேண்டும்.. ஐநா கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன?
காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து தற்போது ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது.
Recommended Video
நியூயார்க்: காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை என்பது இந்தியாவின் பிரச்சனை மட்டும் கிடையாது, அது இரண்டு நாட்டு பிரச்சனை என்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை இன்று நடந்தது. மொத்தமாக 5 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சனை பெரிதாகி வருகிறது. முக்கியமான நாடுகளின் அழுத்தம் காரணமாக உலக அளவில் இது பிரச்சனையாகி வருகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்தது. அதேபோல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு எதிரான நாடுகள் சில இருப்பதால் பாகிஸ்தான் இந்த திட்டத்தை போட்டது.

பேச்சுவார்த்தையை
அதேபோல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடிதமும் அளித்துள்ளது. பாகிஸ்தானை தொடர்ந்து தற்போது சீனாவும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டு இருக்கிறது. அதன்படி காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது.

ஏற்பு
இந்த கோரிக்கையை தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மிக முக்கியமான நிரந்தர உறுப்பினர். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது.

இன்று விசாரணை
அதன்படி காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இன்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்தியது. 5 நிரந்தர உறுப்பினர்கள், 10 உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளது. தனியாக இந்த 15 நாடுகள் மட்டும் இந்த பிரச்சனை குறித்து ஆலோசித்து வருகிறது.

என்ன சிக்கல்
காஷ்மீர் விவகாரம் தற்போது மீண்டும் ஐநா வரை கொண்டு செல்லப்பட்டு இருப்பது இந்தியாவிற்கு கொஞ்சம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதில் ரஷ்யா தெரிவித்த கருத்தின்படி, இந்தியா மட்டும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது. இது இரண்டு நாட்டு பிரச்சனை. இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு எங்களுக்கு நட்பு நாடுகள். அதனால் இரண்டு நாடுகளும் இதில் சரியாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றது.

என்ன அமைதி
அதேபோல் இந்த விவகாரத்தில் மலேசியா அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியது. காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று கூறியது.

சீனா எப்படி
இந்த ஆலோசனையில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியது. இந்தியா தனியாக முடிவு எடுக்க கூடாது. சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் இந்தியா உடனடியாக ராணுவ நடவடிக்கையை விடுத்து, அமைதியான முறையில் பேச்சுவார்த்தைக்கு முயல வேண்டும் என்று கூறியுள்ளது.
என்ன பெரும்பாலும்
இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனையில் 12க்கும் அதிகமான நாடுகள் இது இரண்டு நாட்டு பிரச்சனை. இதை பேசி தீர்க்க வேண்டும். இதில் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க கூடாது என்றுதான் குறிப்பிட்டு இருக்கின்றது. பாகிஸ்தான் இந்த முடிவை தற்போது வரவேற்றுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications