போரின் போது பாலியல் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்திய 21 நாடுகள்... ஐ.நா பட்டியலில் இலங்கை!
நியூயார்க்: போர் சமயத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 21 நாடுகள் அடங்கிய பட்டியல் ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த நாடுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக பிற நாடுகளுடனோ அல்லது உள்நாட்டுப் போரோ மூளும் போது அதில் பெரிதும் பாதிப்பப் படுவது சம்பந்தப்பட்ட நாடுகளின் பெண்கள் தான். ஆனால், சமயங்களில் ஆண்களும், குழந்தைகளும் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாவதுண்டு.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் பாலியல் போர்க்குற்றம் புரிந்த நாடுகள் என பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் 21 நாடுகளில் நடந்த மோதல் மற்றும் போரினால் அந்நாட்டு பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப் பட்டதாக ஐநா தெரிவித்துள்ளது.
அப்பட்டியலை ஐநா பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா வெளியிட்டார்.

அந்த 21 நாடுகள்...
ஐநா வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் இலங்கை, அங்கோலா,போஸ்னியா ஹெர்சகோவினா, கம்போடியா, கினியா, லைபீரியா, லிபியா, நேபாளம், சியராலியோன், சோமாலியா, சூடான், யேமன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஐவரி கோஸ்ட், காங்கோ, மாலி, தென்சூடான், சிரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஆயுதம்...
அண்மை காலங்களில் நடைபெற்ற போர்களில் மேற்கூறிய இந்த நாடுகள் பாலியல் கொடுமைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்களை ஆயுதமாக பயன்படுத்தியதாக ஐநா குறிப்பிட்டுள்ளது.

மோதல்களிலும்...
ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆகிய நாடுகளில் நடந்த மோதல்களில் பாலியல் வன்முறைகள் அரங்கேறியதாக சான்னாப் ஹவா பங்குரா தெரிவித்தார்.

34 ஆயுதக் குழுக்கள்...
மேலும், போராட்ட குழுவினர், ஆயுதக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் என, 34 ஆயுதக் குழுக்கள், மோதல் சூழலில் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

விரைந்து நடவடிக்கை...
சம்பந்தப்பட்ட நாடுகள் அல்லது பகுதிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications