ஸ்ரீதேவி மரணம்... இத்தனை கேள்விகளுக்கு எப்போது கிடைக்கும் பதில்?
ஸ்ரீதேவி மரணத்தில் விடை தெரியாத பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
Recommended Video

துபாய்: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் போலீசார் விளக்கம் அளித்திருந்தாலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன.
துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது.
பின்னர் மது போதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்துவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.

கேள்விக்கு என்ன பதில்?
இதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போதுதான் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய உண்மைகளும் தெரிய வரும்.

எப்போது வந்தார் போனி கபூர்?
ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு போனி கபூர் எத்தனை மணிக்கு வந்தார்? எத்தனை மணிக்கு ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக போலீசாருக்கு போனி கபூர் தெரிவித்தார்?

குளியல் தொட்டியில் நீர் இருந்ததா?
ஸ்ரீதேவியின் மரணம் எத்தனை மணிக்கு நிகழ்ந்தது? குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் எனில் ஏற்கனவே அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்ததா?

குளியல் அறை கதவு உடைக்கப்பட்டதா?
ஸ்ரீதேவி இறந்து கிடந்ததாக கூறப்படும் குளியல் அறையின் கதவை போனி கபூர் எப்படி உடைத்தார்? அல்லது அந்த கதவு திறந்தே கிடந்ததா?

மது பாட்டில்கள் இருந்தனவா?
ஸ்ரீதேவி மது அருந்தி இருந்தார் என கூறப்படுகிறது. மது பாட்டில், மது குடிக்கும் கிளாஸ் ஆகியவை ஸ்ரீதேவி அறையில் இருந்தனவா?

தண்ணீர் வெளியே ஓடியதா?
குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார் என கூறப்படுகிறது. அப்படியால் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேறி அறைக்குள்ளும் அந்த தளத்திலும் ஓடியதா?

விழுந்து இறந்தார் எனில் காயமா?
குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் எனில் ஸ்ரீதேவியின் தலையில் காயம் ஏதும் இருந்ததா? ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சையாகும் நிலையில் அவரது செல்போன் எண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதா? இத்தனை கேள்விகளுக்கு எப்போதுதான் கிடைக்கும் பதில்?
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications