ஷாக்கிங்.. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி!
காராச்சி: இந்தியாவின் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டடுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Recommended Video
இந்தியாவை இப்போதும் உலக்கி வரும் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம். மும்பையை ஆட்டிப்படைத்து வந்த தாவுத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் இருக்கிறார். பாகிஸ்தானில் கராச்சியில் இவர் வசித்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.
1993 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு இவர்தான் காரணம் என்று புகார் உள்ளது. அதேபோல் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதலுக்கு இவர் காரணமாக இருந்தார்.

எங்கே இருக்கிறார்?
இவர் உலக அளவில் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் இவர் பதுங்கி உள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இவருக்கு ஆதரவு வழங்கி வருகிறது என்று புகார் உள்ளது. ஆனால் இந்த புகாரை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. 2011இல் கராச்சி, பாகிஸ்தானில் நடைபெற்ற இவரின் மகனின் திருமணத்தில் பாகிஸ்தான் உயரதிகாரிகள் கலந்து கொண்டது பெரிய சர்ச்சையானது .

கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டடுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அவரின் மனைவி மேஜபீனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று கூறுகிறார்கள். தற்போது தாவுத் இப்ராஹிம் கராச்சியில் இருக்கிறார். அங்கு இருக்கும் ராணுவ மருத்துவமனை ஒன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சிகிச்சை
பாகிஸ்தான் கராச்சியில் இருக்கும் ஐஎஸ்ஐ மையத்தின் தலைவர், ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவரிடம் இந்த தகவலை தெரிவித்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுகுறித்து பாகிஸ்தான் அரசாங்கம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தாவுத்திற்கு தற்போது ராணுவ மையத்தில் மிக தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எப்படி வந்தது
தாவுத்திற்கு அவரின் வீட்டு பணியாளர்கள் மூலம் கொரோனா வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவரின் வீட்டு பணியாளர்கள் சிலர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் வீட்டு பணியாளர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தாவுத் இப்ராஹீமை பாகிஸ்தான் இத்தனை நாட்களாக துருப்பு சீட்டு போல பயன்படுத்தி வந்தது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications