For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலையை காட்டிய தாலிபான்கள்.. மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிகளில் நுழைய தடை.. ஐ.நா. எச்சரிக்கை

Google Oneindia Tamil News

காபூல்: தாலிபான்கள் தங்களது கொள்கையை ஆப்கானிஸ்தானில் முழுவீச்சில் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். அப்படித்தான், சமீபத்தில் அவர்கள் பிறப்பித்த ஒரு, உத்தரவு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தாலிபான்கள், மாணவர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வரவேண்டும், மாணவிகள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆண் ஆசிரியர்கள் மட்டும் தான் பள்ளியில் பாடம் சொல்லித் தரவேண்டும், ஆசிரியைகளுக்கு அனுமதி கிடையாது என்று தாலிபான்கள் அறிவித்தனர்.

ஒரே அலறல்.. துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆப்கன் பெண்களை ரப்பர் டியூப்பால் அடித்து விரட்டும் தாலிபான்ஒரே அலறல்.. துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆப்கன் பெண்களை ரப்பர் டியூப்பால் அடித்து விரட்டும் தாலிபான்

பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறப்பு

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பெண் கல்வி மறுக்கப்படுவது சமுதாய ஏற்றத்தாழ்வுகள் வழிவகுக்கும் என்று ஐநா எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 18ம் தேதி முதல் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பதற்கு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கப்பட்டதால் அவர்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி போய் இருக்கிறார்கள்.

பரிதாப நிலை

பரிதாப நிலை

கடந்த 20 வருடமாக மக்களாட்சி நடைபெற்றதால் பெண்கள் சுதந்திரமாக கல்வி கற்க முடிந்தது. இப்போது அவர்கள் நிலைமை பரிதாபகரமாக மாறியுள்ளது. 2001ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டது அல்லவா.. அதன் பிறகு சுமார் இரு மடங்கு அளவுக்கு பெண்களின் கல்வி அங்கு மேம்பட்டுள்ளது.

பெண் கல்வி

பெண் கல்வி

தற்போது பெண்களின் கல்வியறிவு ஆப்கானிஸ்தான் நாட்டில் 30 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. மறுபடியும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டதால் பெண்கள் நிலைமை பழையபடி பின்னோக்கி செல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Recommended Video

    IPL 2021 banned in Afghanistan! Talibans Anti Islam Content | OneIndia Tamil
    மாணவிகள் எண்ணிக்கை

    மாணவிகள் எண்ணிக்கை

    2001ம் ஆண்டு துவக்க பள்ளிக்கூடங்களில், மாணவர்கள் மட்டும்தான் பயின்று வந்தனர். பூஜ்ஜியம் என்ற அளவில் இருந்த மாணவிகள் எண்ணிக்கை 2018ம் ஆண்டு 25 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்தது. 2001-ஆம் ஆண்டில் 5,000 என்ற அளவுக்கு இருந்த உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 90 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரித்தது என்பது குறிப்பிடதக்கது.

     மீள முடியாத விளைவுகள் ஏற்படும்

    மீள முடியாத விளைவுகள் ஏற்படும்

    ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும், பெண்களை அனுமதிக்காவிட்டால் "மீளமுடியாத விளைவுகள்" ஏற்படும். குறிப்பாக, பெண் கல்வி பாதிக்கப்பட்டால், அவர்கள் கல்வி மற்றும் வாழ்க்கையில் பின்தங்கிவிடலாம். இது கல்வியை முழுவதுமாக கைவிடும் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் குழந்தை திருமணம் போன்ற எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்பட வழி வகுக்கிறது" என்று அசோலே தெரிவித்துள்ளார்.

    English summary
    Since the Taliban-led government in Afghanistan ordered only boys and male teachers to come back to schools, restricting entry of girls, the United Nations (UN) said that doing so violates the fundamental right to education.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X