போதும்.. நிறுத்துங்கள்! உக்ரைன் போர்.. ரஷ்யாவிற்கு ஐநா பொது சபை கடும் கண்டனம்.. அவசர கூட்டம்
மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு ஐநா பொதுச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது இது என்று ஐநா பொதுச்சபை விமர்சனம் செய்துள்ளது.
உக்ரைன் நாட்டிற்கு உள்ளே கடந்த ஒரு வாரமாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. உக்ரைன் நாடு நேட்டோ படையில் இணையும் அறிகுறிகள் தெரிந்ததாலும், ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருந்ததாலும் கோபம் அடைந்த ரஷ்யா இந்த படையெடுப்பை தொடங்கி உள்ளது.
உக்ரைனின் கிழக்கு பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா தற்போது உக்ரைன் தலைநகர் கீவை பிடிக்கும் பொருட்டு மோதல் நடத்தி வருகிறது. கடந்த 4 நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவில் கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது.

உக்ரைன்
உக்ரைனுக்கு 25க்கும் அதிகமான நாடுகள் பொருள் உதவி , ராணுவ உதவி, ராணுவ உபகரணங்கள் உதவி ஆகியவற்றை செய்துள்ளது. அதேபோல் ரஷ்யாவை உலக நாடுகள் பல ஒதுக்கி வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்களை பல உலக நாடுகள் வெளியேற்றி உள்ளது. ரஷ்யாவுடன் முற்றிலுமாக உறவை துண்டிப்பதாக பல்வேறு ஐரோப்பா நாடுகள், மேற்கு உலக நாடுகள் அறிவித்து உள்ளன.

ஐநா பொதுச்சபை
இந்த நிலையில்தான் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு ஐநா பொதுச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது இது என்று ஐநா பொதுச்சபை விமர்சனம் செய்துள்ளது. ரஷ்யாவின் போருக்கு எதிராக ஐநாவின் இந்த அவசர பொது சபை கூட்டம் கூட்டப்பட்டது. உலக வரலாற்றில் 11வது முறையாக இப்படி அவசர ஐநா பொதுச்சபை கூட்டம் நடப்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

கூட்டம்
ஐநாவின் 77 வருட வரலாற்றில் இப்படி ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரண்டாவது முறை அவசர கூட்டம் நடக்கிறது. இதற்கு முன் கிரிமியா விவகாரத்தில் இப்படி அவசர கூட்டம் நடைபெற்றது. நேற்று இரவு நடந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர் ஆண்டடேனியோ குட்ரேஸ் ரஷ்யா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். உக்ரைனில் நடக்கும் போர் உடனே நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச விதிகளை ரஷ்யா மதிக்க வேண்டும்.

போதும்
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகளின் பொருளாதாரம் ஏற்கனவே மோசமாக உள்ளது. போதும். இதற்கு மேல் மக்கள் பலியாக வேண்டாம். இதற்கு மேல் உலக நாடுகள் பாதிக்க வேண்டாம். வீரர்கள் உடனே தங்கள் எல்லைக்கு செல்ல வேண்டும். தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுகுறிப்பிட்டார். 193 நாடுகள் உள்ள ஐநா பொது சபையில் இனி வரும் நாட்களில் வரிசையாக ஒவ்வொரு நாடுகளும் பேசும்.
Recommended Video

எத்தனை நாடுகள்
அதன்பின் புதன் கிழமை ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக வாக்கெடுப்பு நடக்கும். அதில் பெரும்பாலும் 100க்கும் அதிகமான நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் போருக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, அமீரகம் ஆகியவை வாக்களிக்கவில்லை. மற்ற 11 நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications