தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான்.. ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை
ஜெனீவா: ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டில் சென்ற நிலையில் அது குறித்து விவாதிக்க இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனையை நடத்துகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை வேகமாக தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய தினம் காபூலில் உள்ள அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர். அங்கு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

இந்த நிலையில் விமான நிலையங்களை தலிபான்கள் நெருங்கக் கூடாது என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததால் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல மக்கள் விமான நிலையங்களில் குழுமியுள்ளனர்.
மற்ற நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள், தூதரக அதிகாரிகளை தனி விமானம் மூலம் அழைத்து செல்கிறார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இன்றைய தினம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.

எஸ்டோனியா, நார்வே ஆகிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஐநா இந்த கூட்டத்தை நடத்துகிறது. ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆப்கானிஸ்தான் நிலை குறித்து விளக்குவார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறும் உள்நாட்டு போரை தடுக்க பேச்சுவார்த்தை நடத்துமாறும் கடந்த வெள்ளிக்கிழமை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications