உடம்பே சிலிர்க்குதே.. இந்த வீடியோவை பாருங்க.. ரஷ்யாவில் பல அடி உயரத்திற்கு பாய்ந்த சுனாமி அலைகள்!
மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது
இதன் காரணமாக 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து கடற்கரையில் மோதியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல பசிபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் சுனாமி
ரஷ்யாவின் தூரக் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4 மீட்டர் (13 அடி) உயரம் வரை சுனாமி அலைகளை உருவாக்கியது. இதனால் அப்பகுதி மற்றும் ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பசிபிக் முழுவதும் ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல தீவு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதுவரை பெரிய காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, சுனாமி ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவின் கடலோரப் பகுதிகளையும் தாக்கியது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 19.3 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் மையப்பகுதி அவச்சா விரிகுடாவில் அமைந்துள்ள சுமார் 1,65,000 மக்கள்தொகை கொண்ட கடலோர நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்காவிலிருந்து கிழக்கே தென் கிழக்கே சுமார் 125 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் இருந்தது. முதலில் நிலநடுக்கத்தின் அளவு 8.0 ஆக இருந்தது, பின்னர் 8.8 ஆக USGS மாற்றியது.
வீடியோ காட்சிகள்
இந்த சுனாமியின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கம்சட்கா பிராந்தியத்தின் சில பகுதிகளில் 3 முதல் 4 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக ரஷ்யாவின் அவசரநிலை அமைச்சர் தெரிவித்தார்.
"அனைவரும் நீர்நிலைகளில் இருந்து வெளியேற வேண்டும்" என்று அமைச்சர் லெபெடேவ் கேட்டுக்கொண்டார். அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அபாயகரமான சுனாமி அலைகள் மூன்று மணி நேரத்திற்குள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தது. ரஷ்யாவின் பசிபிக் கடற்கரை மற்றும் வடமேற்கு ஹவாய் தீவுகளின் பகுதிகளில் அலைகளின் உயரம் சராசரி அளவை விட 3 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலாவ், மார்ஷல் தீவுகள், சூக் மற்றும் கோஸ்ரே ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் 0.3 முதல் 1 மீட்டர் வரை சுனாமி அலைகள் இருக்கும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது. தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானின் கடற்கரைகளில் 0.3 மீட்டருக்கும் குறைவான சிறிய சுனாமி அலைகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨🇯🇵 BREAKING: Japan right now —as the tsunami begins.pic.twitter.com/ap4krWs9HS
— Jackson Hinkle 🇺🇸 (@jacksonhinklle) July 30, 2025
ஜப்பானில், சுனாமி அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. பிரதமர் ஷிகேரு இஷிபா நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். மேலும் அரசாங்கத்தின் பதிலளிப்பை ஒருங்கிணைக்க அவசரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
A video shows the tsunami already reaching Petropavlovsk-Kamchatsky, Kamchatka, Russia, following the massive earthquake pic.twitter.com/G3mLFUk5dn
— Faytuks Network (@FaytuksNetwork) July 30, 2025
பசிபிக் நிலநடுக்கம்
முக்கிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, 6.9 ரிக்டர் அளவிலான பின் அதிர்வு பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்காவிற்கு தென்கிழக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஜூலை மாத தொடக்கத்தில் கம்சட்கா அருகே கடலில் பதிவான ஐந்து வலுவான நிலநடுக்கங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. அவற்றில் வலுவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்காவிற்கு கிழக்கே 144 கிலோமீட்டர் (89 மைல்) தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
Tsunami waves hitting Japan.
— AmericanPapaBear (@AmericaPapaBear) July 30, 2025
Pray for them. 🙏
pic.twitter.com/2kd171J8qB
பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியான கம்சட்கா உலகின் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும். நவம்பர் 4, 1952 அன்று, இப்பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஹவாயில் 9.1 மீட்டர் (30 அடி) அலைகளை உருவாக்கியது, இருப்பினும் அந்த நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications