Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்க அரண்மனை, ரூ.3400 கோடி சொகுசு படகு, தனி விமான கம்பெனி.. கத்தார் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு

Subscribe to Oneindia Tamil

கத்தார்: அரசு முறை பயணமாக இந்தியா வந்த கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானிவை விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்று இருந்தார். மற்ற உலக தலைவர்களைப் போல கத்தார் அமீர் ஷேக் தமீம் குறித்து பலருக்குத் தெரியாது. ஆனால், தங்க மாளிகை, பல நூறு கோடி மதிப்பிலான சொகுசு படகு என்று உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவே கத்தார் அமீர் ஷேக் தமீமின் அரச குடும்பம் இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எண்ணெய் வளமும் இயற்கை எரிவாயுவும் அதிகளவில் உள்ள நாடாக கத்தார் இருக்கிறது. இதனால் உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கத்தார் இருக்கிறது.

Qatar middle east offbeat

கத்தாரை இப்போது அல்-தானி குடும்பம் தான் ஆட்சி செய்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளாகவே இவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் கத்தார் இருக்கிறது என்பதால் இவர்களுக்குக் கணக்கிடவே முடியாத அளவுக்குச் செல்வம் குவிந்துள்ளது.

தலையே சுத்துதே

ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி தனது தந்தை ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்-தானிக்கு பிறகு 2013இல் கத்தாரின் அமீராகப் பதவியேற்றார். கத்தாரை ஆட்சி செய்யும் 11ஆவது அமீர் அல் தானி ஆவர். கத்தார் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு $335 பில்லியன் (29 லட்சம் கோடி ரூபாய்) ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஷேக் தமீமுக்கு மட்டும் $2 பில்லியனுக்கும் (ரூ.17 ஆயிரம் கோடி) அதிகமான சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்த வருவாயை கத்தார் அரச குடும்பம் உலகெங்கும் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்கள் வருவாயைப் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதன் மூலம் குறுகிய காலத்தில் அவர்களின் சொத்துகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

தங்க மாளிகை

கத்தார் அரச குடும்பம் $1 பில்லியன் மதிப்புடைய 15 அரண்மனைகளை உள்ளடக்கிய தோஹா ராயல் மாளிகையில் வசிக்கிறார்கள். தங்க மாளிகை எனச் சொல்லும் அளவுக்குத் தங்கத்தை வைத்தே இது கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 500 கார்களை நிறுத்த முடியும். மேலும், ஓமானில் உள்ள வெள்ளை நிற மாளிகையும் ஷேக் தமீமுக்கு சொந்தமானது தான்.

மேலும், கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் அமீரின் மனைவிகளில் ஒருவரான ஷேக்கா மோசா பின்ட் நாசர் அல் மிஸ்னெட் என்பவர் லண்டனில் $140 மில்லியனுக்கு மூன்று கார்ன்வால் டெரஸ் மாளிகையை வாங்கினார். அதை 17 படுக்கையறைகள், சினிமா தியேட்டர் மற்றும் நீச்சல் குளம் கொண்ட ஒரு சூப்பர்-மேன்ஷனாக மாற்றியுள்ளனர்.

பிரம்மாண்ட யாட்ச்

உலகின் மிக ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த மெகா-யாட்ச்களில் ( mega-yachts) ஒன்றான தி கட்டாரா கத்தார் அமீர் ஷேக் தமீமுக்கு சொந்தமானதாகும். இதன் மதிப்பு சுமார் $400 மில்லியன் டாலராகும். 124 மீட்டர் நீளமுள்ள இந்த யாட்சில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் கூட இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டில், தோஹாவில் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மில்லின் டாலர் மதிப்பிலான அரச குடும்பத்திற்குச் சொந்தமான மூன்று யாட்ச்கள் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

தனி விமான நிறுவனம்

பொதுவாக பெரும் பணக்காரர்கள் தங்களுக்கு எனத் தனியாக பிரைவேட் ஜெட் எனப்படும் விமானங்களை வைத்துக் கொள்வது வழக்கம் தான். ஆனால், இந்த அரச குடும்பம் தங்களுக்காக கத்தார் அமிரி என்ற விமான நிறுவனத்தையே நடத்தி வருகிறது. இதில் கத்தார் அரச குடும்பத்தினரும் டாப் அரசு அதிகாரிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதில் 3 போயிங் 747 விமானங்கள், பல சிறிய ஏர்பஸ் விமானங்கள் உட்பட 14 விமானங்கள் உள்ளன.

கார் கலெக்ஷன்

அமீரின் கார் கலெக்ஷனில் புகாட்டி டிவோ, வேய்ரான், சிரோன், லாஃபெராரி அபெர்டா, லம்போர்கினி சென்டெனாரியோ, மெர்சிடிஸ் ஏஎம்ஜி 6x6 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் எனப் பல அதிநவீன சொகுசு கார்களும் உள்ளன. மேலும், பால் செசானின் "தி கார்டு பிளேயர்ஸ்" ($250 மில்லியன், 2011), மார்க் ரோத்கோவின் "வெள்ளை மையம்" ($72.8 மில்லியன்), ஆண்டி வார்ஹோலின் "மென் இன் ஹெர் லைஃப்" ($63.4 மில்லியன்) என பல அரிய ஓவியங்களின் கலெக்ஷனும் கத்தார் அரச குடும்பம் வசம் உள்ளது.

பிற முதலீடுகள்

கத்தார் அரச குடும்பம் 2004இல் கத்தார் ஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டை நிறுவியது. இந்த அமைப்பு தான் இப்போது புகழ்பெற்ற பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி உரிமையாளராக உள்ளது. மேலும், போர்ச்சுகலின் எஸ்சி பிராகா (21.7 சதவீதம்), ஸ்பெயினின் மலாகா CF என பல கால்பந்து அணிகளிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது.

கத்தார் முதலீட்டு ஆணையம் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். பார்க்லேஸ், வோக்ஸ்வாகன், லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் எம்பயர் ஸ்டேட் பில்டிங் என பலவற்றில் இவர்களுக்கு பங்கு உள்ளது. அதாவது இப்போது இந்தியா வந்துள்ள இந்த ஷேக் தமீம் தான் கத்தாரின் வெளிநாட்டு முதலீடுகளை இப்போது கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+