செயற்கைக்கோள் படங்கள்:
மார்ச் 23: மாயமான மலேசிய விமானம் குறித்து பிரான்ஸ் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை பெற்றுள்ளது.அந்த புகைப்படங்களில், இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதல் பணி நடைபெறும் பகுதியில் மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடலின் தென் பகுதியில் அந்த செயலாற்றும் தன்மை கொண்ட பொருட்கள் கிடப்பதாக தெரிய வந்துள்ளது என்றும், சீன செயற்கைக்கோள் புதிதாக தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மிக பெரிய பொருள் கிடப்பதாக புகைப்படத்தில் காட்டியது.
இதனை தொடர்ந்து தேடுதல் பணியில் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் நடைபெறும் பகுதி பெர்த்தில் இருந்து தென்மேற்கில் 1,550 மைல்கள் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இடையூறு ஏற்படும் வகையில் பலத்த காற்று மற்றும் அண்டார்டிகாவை சுற்றிலும் கிழக்கு நோக்கி அலைகள் நிற்காமல் வீசி செல்வதுமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய விமானங்கள் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. அது வழக்கமாக பறக்க வேண்டிய ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு மாறாக மேகம் சூழ்ந்த காரணத்தால் 450 அடி உயரத்திற்கு பறக்கும் சூழல் உண்டாகி உள்ளது.
சூரிய வெளிச்சம் குறைவானதால் நீரில் பொருட்கள் ஏதும் இருக்கிறதாக என்பதை காண்பது கடினமான பணியாக உள்ளது. மங்கிய வானம் மற்றும் மங்கிய நீர்பரப்பு ஒன்றுடன் ஒன்று இணைந்து தெளிவற்ற சூழலை தேடுதல் குழுவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 24:
இன்று காலையில் சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியப் பெருங்கடலின் 120 கிலோமீட்டர் மேற்காக ஒரு சிறிய,சதுரமான வெள்ளை நிற பொருளை கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளது.அங்கு, ஆஸ்திரேலிய தேடுதல் வேட்டை ஏற்கனவே நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி, சீனா அரசின் சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள தகவலில் வெள்ளை நிறத்தில் சதுர வடிவிலான பொருளை சீன விமானம் இல்யூஷின்-76 கண்டுபிடித்து உள்ளது என தகவல் வெளியிட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய விமானப்படை வேண்டுகோளின்படி, ஒரு ஆஸ்திரேலிய விமானி சீனாவின் தேடுதல் வேட்டையில் சேர்த்து கொள்ளப்பட்டு உள்ளார்.
இந்திய பெருங்கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் வெள்ளை நிறத்தி லான இரண்டு பொருட்களை கண்டு பிடித்து உள்ளதாக அமெரிக்காவின் ஏ.பிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்த பொருளானது 22.5 மீட்டர்க்கு 13 மீட்டர் என்ற அளவிற்குள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மார்ச் 25:
கடந்த 17 நாட்களாக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மலேசிய விமான மாயத்தின் நித்திரையை இன்று மலேசிய பிரதமர் நஜீப் அதிகாரபூர்வமாக கலைத்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானம் எம்ஹெச்370 விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உட்பட யாருமே உயிர் பிழைக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்,இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப் பட்டு இன்று அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications