For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமானி தற்கொலை?

Google Oneindia Tamil News

மார்ச் 17: ஆஸ்திரேலியா , இந்திய பெருங்கடல் பகுதியில் தேடுதலை நடத்தியது. சட்ட அமலாக்க பிரிவினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.

விமானி தற்கொலை செய்து கொண்டது சாத்தியம் என்று அதிகாரிகள் விவாதித்தனர். விமான பொறியாளர் பயணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மார்ச் 18:

வளர்ச்சி அடைந்த விமான போக்குவரத்து வரலாற்றில் நீண்ட நாட்களாக கண்டறியப்பட இயலாத ஒன்றாக மாயமான மலேசிய விமான நிகழ்வு உள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா உடன் அமெரிக்கா இணைந்து தேட தொடங்கியது.

Updates in the search for missing Malaysia Airlines flight MH370 crashed

மார்ச் 19:

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியில் விமானியின் வீட்டில் இருந்த விமான இயக்கும் கருவியில் தகவல் நீக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் மலேசியாவுடன் அமெரிக்காவின் எப்.பி.ஐ. இணைந்தது.

மார்ச் 20:

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் பொருட்கள் கிடப்பது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை தொடர்ந்து வான்வழி மற்றும் கடற்பரப்பு வழியேயான தேடுதல் பணி இந்திய பெருங்கடலின் உள்ளடங்கிய பகுதி நோக்கி நீண்டது.

புகைப்படங்கள் மார்ச் 16 இல் எடுக்கப்பட்டு இருந்தது. 4 நாட்களை கடந்தும் தேடுதல் பணியினரால் எந்த சிதைவு பொருட்களையும் கண்டறிய முடியவில்லை.

மார்ச் 21:

வான்வழியே ஆன அடுத்த நாளின் தேடுதலிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பு விமானம் நிலையாக மற்றும் சீராக பயணித்துள்ளது என்பதை செயற்கைக்கோளின் இன்மார் சாட் (ஐசாட்) புகைப்பட ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

மார்ச் 22:

மலேசியாவின் போக்குவரத்துத்துறை மந்திரி ஹிசாமுத்தீன் உசைன் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, "மிதக்கும் பொருட்கள் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை சீன தூதர் வைத்திருக்கிறார். அந்த பொருட்கள் தெற்கு பகுதியில் உள்ளன. அது குறித்து ஆய்வு மேற்கொள்ள அவர்கள் கப்பல்களை அனுப்புவார்கள்" என்று கூறினார்.

அவர், சூறாவளி வரும் வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதியில் நடைபெறும் தேடுதல் பணி மிக சவாலாக உள்ளது. மிதக்கும் பொருட்கள் கண்டறியப்பட்ட கடற்பகுதியில் கடுமையான நீரோட்டங்கள் உள்ளன. சூறாவளி எச்சரிக்கையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிலியான் என்ற பருவகால சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளது என்றும் உசைன் தெரிவித்து இருந்தார்.

ஆஸ்திரேலியாவின் பிரதமர் வாரன் டிரஸ் கூறும்போது, தேடுதல் விமானங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் உள்ளன. அவற்றின் பணிகள் அனைத்தும் நேரடியாக பார்க்கும் வகையில் இருக்கும் என்றார்.

செயற்கைக்கோள் படத்தில் காணப்பட்ட பொருட்கள் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் போய் சேர்ந்திருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் மற்றொரு சுற்று தேடுதல் பணியில் விமானங்கள் ஈடுபடு தொடங்கியுள்ளன. இரண்டு வாரங்களாக மாயமான விமானம் குறித்த சர்ச்சைக்கிடையே பணி தொடர்கிறது.

இந்த பணிக்காக 6 விமானங்களை ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளது. அவை 5 மணி நேரத்தில் தேடுதலை நடத்தும் திறன் வாய்ந்த விமானங்கள் ஆகும்.

English summary
Keep up to date with the search which now covers huge parts of the Indian Ocean and vast parts of Asia. It has been claimed that the missing plane dropped to as low as 12,000ft after it banked to the left over the South China Sea. But, today the flight crash confirmed by Malaysian government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X