தூத்துக்குடி மாணவி கொலையில் திடீர் திருப்பம்! உடல் துண்டு, துண்டாக வெட்டப்படவில்லை - காவல்துறை
தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், சிறுமி துண்டு துண்டாக வெட்டப்படவில்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.
12ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இயற்கை உபாதைகளை கழிக்க அருகில் உள்ள காட்டு பகுதிக்குள் சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வராததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை தேடியுள்ளனர். சிறுமி உடலில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தற்போது வரை 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது தெரிய வரும்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கமல்ஹாசன், சிபிஎம் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இப்படி இருக்கையில், இந்த சம்பவத்தில் மாணவி துண்டு துண்டாக வெட்டப்படவில்லை என்று போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
உடற்கூறாய்வுக்கு பின்னரே என்ன நடந்தது என்பது குறித்து தெரிய வரும். எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை ஷேர் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications