அசால்ட்டாக 135 கிமீ வேகம்.. அடுத்த சிவம் துபே ரெடி.. அறிமுக போட்டியிலேயே மிரட்டிய சூர்யன்ஷ் ஷெட்கே!

Subscribe to Oneindia Tamil

பெல்பாஸ்ட்: இந்திய அணிக்காக அறிமுகமாகி இருக்கும் சூர்யன்ஷ் ஷெட்கே பவுலிங் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சூர்யன்ஷ் ஷெட்கே எளிதாக 135 கிமீ வேகத்தில் பவுலிங் செய்கிறார். இதனால் இந்திய அணிக்கு அடுத்த சிவம் துபே ரெடி என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார் மும்பையைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான சூர்யன்ஷ் ஷெட்கே. உள்நாட்டு கிரிக்கெட் தொடர், ஐபிஎல் மற்றும் இந்தியா ஏ அணிகளுக்காக ஆடிய போட்டிகளில் சூர்யவன்ஷ் ஷெட்கேவின் செயல்பாடுகள் பலரையும் கவர்ந்தது.

Shivam Dube

இந்தப் போட்டியில் முதல் ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த சூர்யவன்ஷ் ஷெட்கே, அடுத்த ஓவரில் 22 ரன்களை விட்டுக் கொடுத்தார். இருந்தாலும் எளிதாக 135 கிமீ வேகத்தில் பந்துவீசி அயர்லாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த சூர்யன்ஷ், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பந்துவீச்சுப் பற்றாக்குறையைத் தீர்க்கும் ஒரு புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார்.

பொதுவாக இந்திய அணிக்கு பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் கிடைப்பதே அரிதான விஷயம். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இதுநாள் வரை ஒரு மாற்று வீரரை கூட உருவாக்க தடுமாறி வருகிறது பிசிசிஐ. இப்போதுதான் நிதிஷ் குமார் ரெட்டி கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார். அவரும் கூட 140 கிமீ வேகத்தில் வீசுவது கிடையாது.

ஆனால் சூர்யன்ஷ் ஷெட்கே எவ்வித சிரமமும் இன்றி எளிதாக 135 கிமீ வேகத்தில் வீசி வருகிறார். இவரது பந்துவீச்சில் இருக்கும் வேகம் சிறப்பாக இருந்தாலும், இன்னும் துல்லியம் வரவில்லை. ஆனால் முதல் போட்டியிலேயே துணிவுடன் பவுலிங் செய்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதனால் வரும் போட்டிகளில் சர்வதேச அரங்கில் தனது முதல் போட்டியிலேயே சீனியர் பந்துவீச்சாளர்களுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா, சிவம் துபே ஆகியோருக்குப் பிறகு இந்திய அணிக்கு ஒரு தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவைப்பட்ட சூழலில், சூர்யன்ஷின் இந்த எண்ட்ரி ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

துபேவைப் போலவே அதிரடி பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் அசத்தும் திறன் கொண்டவர் என்பதால், ரசிகர்கள் இவரை "இந்திய அணியின் அடுத்த சிவம் துபே" என அழைக்கத் தொடங்கியுள்ளனர். டி20 உலகக்கோப்பைத் தொடர்களுக்குப் பின் இந்திய அணி ஒரு வலுவான மறுகட்டமைப்பை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், சூர்யன்ஷ் ஷெட்கே போன்ற ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்திருப்பது கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்திற்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+