சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைப்பதற்காக விஜயா ஒரு பெண்ணை பார்த்து பேசி முடிக்கிறார். இந்த விஷயம் ரோகிணிக்கு தெரிகிறது. அதே நேரத்தில் முத்து வாழ்க்கையில் நல்ல விஷயம் நடக்கிறது என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், மனோஜ் ரோகிணியை எப்படியாவது டைவர்ஸ் கேஸில் சிக்க வைக்க வேண்டும் என்று பிளான் போடுகிறார். அதற்காக தனது நண்பன் சந்தோஷை பயன்படுத்துகிறார். ரோகிணியை காதலிப்பது போல நடித்து, ஒரு பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும் என்று மனோஜ் சந்தோஷிடம் சொல்லுகிறார். நண்பனின் பேச்சை நம்பி சந்தோஷும் ரோகிணியிடம் சென்று காதலை சொல்கிறார். ஆனால் அந்த திட்டம் எதிர்பார்த்தபடி செல்லவில்லை.

ரோகிணி சந்தோஷை தனியாக ஒரு இடத்திற்கு வரச் சொல்லி, அங்கே அவருக்கு சவுக்கடி கொடுக்கிறார். அதன் பிறகு அங்கு வந்த முத்துவும் மனோஜும் சேர்ந்து சந்தோஷை காப்பாற்றுகிறார்கள். இதனால் மனோஜின் திட்டம் முழுவதும் சொதப்பி விடுகிறது. அதனால் மனோஜ் மிகவும் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
(Siragadikka Aasai Serial March 11, 2026 episode) அடுத்த நாள் மனோஜ் ஷோரூமில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி அங்கு வருகிறார். ரோகிணியை பார்த்ததும் சந்தோஷ் உடனே ஒளிந்து கொள்கிறார். அதை பார்த்த ரோகிணி மனோஜை பார்த்து கிண்டலாக பேச ஆரம்பிக்கிறார். "உனக்கு தான் பிளான் ஒழுங்கா பண்ண வராதுல்ல... நீ போட்ட பிளான்ல பாவம் உன்னோட நண்பன் தான் அடிவாங்கிட்டான்" என்று சொல்கிறார். அதற்கு பதிலாக மனோஜ், "நீ ரொம்ப டேஞ்சரான ஆள். சந்தோஷையே இப்படி ஆள் வச்சு அடிச்சிருக்க" என்று திட்டுகிறார்.
இதற்கு ரோகிணி உடனே பதிலடி கொடுக்கிறார். "நீ மட்டும் என்ன ஒழுங்கானவனா? உன்னோட மனைவியைக் கெட்டவளாக காட்ட ஒருத்தனை அனுப்பி அவளிடம் காதல் சொல்ல வைக்கிறாய். உலகத்துல எந்த கணவன் இப்படிச் செய்வான்?" என்று நேரடியாக கேள்வி கேட்கிறார். இதனால் மனோஜ் கொஞ்சம் திணறுகிறார்.
ரோகிணியின் பதிலடி
அதன்பிறகு மனோஜ், "நீ எதுக்காக இங்க வந்திருக்க?" என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி தன்னுடைய பையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய்க்கான செக்கை எடுத்துக் கொடுத்து, "ஒரு கல்யாண சீர்வரிசைக்கான அட்வான்ஸ் இது" என்று கூறுகிறார். அதோடு "நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன்" என்று ஒரு வசனம் சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
முத்து மீனாவின் வாழ்க்கையில் நல்ல விஷயம்
இதற்கிடையில் முத்துவின் வாழ்க்கையிலும் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது. முத்து மீனாவின் பூக்கடைக்கு செல்கிறார். அங்கு மீனா கொடுத்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது ஒரு தம்பதி அவரை சந்திக்க வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பையனை முத்து காப்பாற்றியிருந்தார். அந்த பையனின் பெற்றோர்கள்தான் அந்த தம்பதி. தங்கள் மகனை காப்பாற்றியதற்காக முத்துவுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அப்போது முத்து தானே ஒரு டிரைவராக வேலை பார்த்து வருவதாக சொல்கிறார். அதை கேட்ட அவர்கள், "நீங்கள் ஒரு வேன் வாங்குங்கள். இங்க நிறைய பேர் டூர் போவார்கள். அப்படி போனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்" என்று ஆலோசனை கூறுகிறார்கள். அந்த யோசனை முத்துவுக்கும் பிடித்து போகிறது.

மனோஜ்க்கு கல்யாணம்
இதற்கிடையில் மற்றொரு பக்கம் மனோஜின் அம்மா விஜயா தனது மகனுக்கு புதிதாக பெண் பார்க்க ஆரம்பிக்கிறார். அவர் தனது தோழி பார்வதி வீட்டில் அமர்ந்திருக்கும்போது, அங்கு இரண்டு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெண்ணை மனோஜுக்கு திருமணம் செய்யலாம் என்று பேச வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு 30 வயதாகிவிட்டதாக அவர்கள் சொன்னதும் விஜயா கொஞ்சம் அதிர்ச்சி அடைகிறார். ஆனால் அந்த பெண்ணின் அப்பாவுக்கு நிறைய சொத்து இருக்கிறது என்று சொன்னதும் விஜயாவின் முகம் உடனே மாறி விடுகிறது.
ரோகிணிக்கு தெரிந்த உண்மை
அதன்பிறகு விஜயா தனது மகனுக்கு பெரிய பெரிய இடங்களில் இருந்து வரன் வருகிறது என்று பெருமையாக பேச ஆரம்பிக்கிறார். அதை அருகில் இருந்த பார்வதி மற்றும் சிந்தாமணி இருவரும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
இந்த விஷயம் அங்கேயே நிற்காமல் சிந்தாமணி நேராக ரோகிணி வீட்டிற்கு சென்று சொல்லி விடுகிறார். "மனோஜுக்கு விஜயா புதிய பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று சொல்லியதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இதைக் கேட்ட ரோகிணியின் அம்மா மிகவும் கவலையாக "என் பொண்ணோட வாழ்க்கையே போச்சு" என்று புலம்ப ஆரம்பிக்கிறார். அதை கேட்ட ரோகிணி மிகவும் கோபமாகி அங்கிருந்த கண்ணாடி கிளாஸை தள்ளி உடைத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications