கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல்
சென்னை: கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு, 'கலைஞர் பேருந்து முனைய ரயில் நிலையம்' என பெயர் வைக்க, தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதை குறைக்க, கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் புதியதாக கட்டப்பட்டிருந்தது. இது கடந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், இங்கிருந்து நகரத்திற்குள் வர போதுமான ரயில் வசதி இல்லை என்று பயணிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதனையடுத்து புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த ரயில் நிலையத்திற்கு 'கலைஞர் பேருந்து முனைய ரயில் நிலையம்' என பெயர் வைக்க, தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. சென்னை கோயம்பேடு பகுதியில்தான் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால், இதனை புறநகர் பகுதிக்கு அரசு மாற்றியிருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும், குறையும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் குறையவில்லை என்பது தனிக்கதை.
மறுபுறம் இந்த பேருந்து நிலையம் கோயம்பேடு பகுதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் இருப்பதால், அங்கு செல்லவும் அங்கிருந்து சிட்டிக்குள் வரவும் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, ரயில் நிலையம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரினர். இதனையடுத்து புதிய ரயில் நிலையம் கட்டமைக்கும் பணிகள் தொடங்கின.
வண்டலூர், ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு இடையில், கிளாம்பாக்கத்தில் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் ஒன்று கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த பொங்கலுக்கே ரயில் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பயன்பாட்டுக்கு வரவில்லை. விரைவில் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த ரயில் நிலையத்திற்கு கலைஞர் பேருந்து முனைய ரயில் நிலையம்' என பெயர் வைக்க, தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications