மாணவர்களுக்கு எச்சரிக்கை!.. நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட NTA

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் நடைபெறவுள்ள நீட் (NEET) மறுதேர்வை முன்னிட்டு, தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் தொடர்பான முக்கிய அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி தகவல்கள் மற்றும் மோசடி இணைப்புகளை நம்ப வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த சர்ச்சையையடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மறுதேர்வு நடத்தப்படவுள்ள நிலையில், தேர்வர்களுக்கு புதிய ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

NEET Re Exam 2026

மறுதேர்வு குறித்து என்டிஏ வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் விவரம்: மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யுமாறு தேர்வர்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்பட்டு வருகின்றன. குறுஞ்செய்தி, வாட் மின்னஞ்சல் வாயிலாக இந்த நினைவூட்டல் அனுப்பி வைக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்களுக்கான தேர்வு நகரங்களை புதிதாக தேர்வு செய்துள்ள நிலையில், கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட தேர்வுக்கான ஹால் டிக்கெட் இனி செல்லாது.

நாளை மறுநாள் நடக்கவுள்ள மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் புதிதாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ குறுஞ்செய்திகள், 'NICPEP' என்ற அனுப்புநர் அடையாளத்தில் இருந்தும், மின்னஞ்சல்கள், '[email protected]' முகவரியில் இருந்தும் அனுப்பப்படு என்.டி.ஏ. ஒருபோதும் மறுதேர்வுக்கான கட்டணத்தை செலுத்த சொல்லியோ, வினாத்தாள் தொடர்பான லிங்குகளையோ அனுப்பாது.

இதுபோன்ற தகவல்கள் ஏதேனும் வந்தால், மாணவர்கள் அதை பயன்படுத்த வேண்டாம். மறுதேர்வு குறித்த தகவல்கள் மற்றும் தேர்வு மைய விபரங்கள், இனி தேர்வர்களுக்கு நேரடியாக வாட்ஸாப் வாயிலாக அனுப்பப்படும்.

அனுப்புநரின் பெயருக்கு அருகில் நீல நிற 'சரிபார்ப்பு குறியீடு' மற்றும் 'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி' என்ற பெயர் இருப்பதை தேர்வர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.நீல நிற குறியீடு இல்லாத கணக்கில் இருந்து வரும் எந்தவொரு செய்தியும் என்.டி.ஏ.,விடம் இருந்து வந்ததல்ல. தேர்வு தொடர்பாக என்.டி.ஏ.,வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை தேர்வர்கள் தொடர்பு கொள்ளலாம்.

சந்தேகத்துக்கிடமான செய்திகள் குறித்து அதற்கென ஒதுக்கப்பட்ட தளம் அல்லது சைபர் கிரைம் உதவி எண்கள் வாயிலாக தெரிவிக்கலாம். மறுதேர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகள் மற்றும் வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+