"என் முதல் காதல் பற்றி வெளியே சொன்னா தமிழ்நாடே அதிரும்”.. ஷாக் சஸ்பென்ஸ் வைத்த நடிகை வனிதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது முதல் காதல் குறித்து பேசிய வனிதா, "அதை இப்போது வெளிப்படையாக சொல்ல முடியாது. நான் முதலில் யாரை காதலித்தேன் அல்லது என்னை யார் காதலித்தார்கள் என்பதை வெளியே சொன்னால் தமிழ்நாடே அதிரும். அதனால் அதை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

பிரபல குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர், விஜய் உடன் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழில் மாணிக்கம், மலையாளத்தில் ஹிட்லர் பிரதர்ஸ், தெலுங்கில் தேவி ஆகிய படங்களில் நடித்தார். 1999-க்குப் பிறகு பல ஆண்டுகளாக, வனிதா விஜயகுமார், சினிமாவில் நடிக்கவில்லை.

Vanitha Vijayakumar

2013 ஆம் ஆண்டு நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் வனிதா. அதன்பிறகு நடன இயக்குனர் ராபர்ட் இயக்கிய 'எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார் நடித்திருந்தார்.

பல சர்ச்சைகளிலும் வனிதா விஜயகுமார் பெயர் இடம்பெற்றது. விவாகரத்து, அப்பா விஜயகுமாருடன் சண்டை என செய்திகளில் இடம்பிடித்து வந்தார். வனிதா விஜயகுமார் என்றாலே சர்ச்சை என்ற மனநிலை ரசிகர்களுக்கும் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் இடம்பெற்று தன்னுடைய திறமையையும் நிரூபித்தார் வனிதா விஜயகுமார்.

அண்மையில் Mrs and Mr என்ற படத்தை தயாரித்து நடித்த வனிதா, அடுத்ததாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் வனிதாவின் சமீபத்திய பேட்டி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.

யூடியூப் தளம் ஒன்றில் தனது முதல் காதல் குறித்து பேசிய வனிதா, "என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால், என்னால் இப்போது எதையும் வெளிப்படையாக பேச முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார்? அல்லது நான் யாரை முதன் முதலில் காதலித்தேன் என்பதை என்னால் வெளியே சொல்லவே முடியாது. அப்படி நான் அந்த உண்மையைச் சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும்.

அதனால் அதை சொல்லாமல் நான் மௌனமாக இருப்பதே நல்லது. எனது முதல் காதலை சொல்லாமலே பல வருடங்களை நான் கடந்து வந்துவிட்டேன். என்னுடைய நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும் தான் இருக்கும். முதல் காதல் ரகசியம் எனக்கும் சம்பந்தப்பட்ட அந்த நபர் என இரண்டு பேருக்குமே மிக நன்றாக தெரியும்" எனப் பேசியிருக்கிறார்.

வனிதாவின் இந்தப் பேச்சு வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. அப்படி, உண்மையைச் சொன்னால் தமிழகமே அதிரும் வனிதாவின் முதல் காதலர் யார் என்கிற கேள்வியையும், இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என்கிற யூகங்களை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+