ஈரான் அருகே.. அமெரிக்க போர்க்கப்பலில் தீ விபத்து! விஷயத்தை மூடி மறைக்கும் டிரம்ப்?
தெஹ்ரான்: ஹர்முஸ் நீரிணையை பாதுகாக்கவும், ஈரானை தாக்கவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த போர் கப்பலான, யுஎஸ்எஸ் ஜெரால்டு-ல் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஈரான் தாக்குதலில் விபத்து ஏற்பட்டதா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர்தான், இந்த போர் கப்பலை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது. ஆனால் இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா கூறியிருந்தது. இப்படி இருக்கையில், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது, தாக்குதலில் கப்பல் ஏற்பட்டிருக்கிறதோ? என்கிற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.

என்ன நடந்தது?
இது குறித்து அமெரிக்கா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “வியாழக்கிழமை, USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (CVN-78) விமானம் தாங்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதை USNI நியூஸ் உறுதி செய்தது. தீ அணைக்கப்பட்டாலும், கப்பல் குழுவினர் சேதக் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் பிராந்தியப் பராமரிப்பு மையம் (FDM), தேவையான மின்சார உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது.
கப்பலின் முக்கிய சலவை அறைகளில் தீ ஏற்பட்டது. இந்த தீ விபத்து போர் தொடர்பான சம்பவத்தால் ஏற்படவில்லை. தீ உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கப்பலின் இயக்க அமைப்புக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. கப்பல் முழுமையாக செயல்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் இரண்டு மாலுமிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை சீராக உள்ளது.
சவுதி அரேபியாவின் அல் வாஜ் கடற்கரை அருகே, செங்கடலின் வடக்குப் பகுதியில் ஃபோர்டு கப்பல் செயல்பட்டு வந்தது. ஃபோர்டு மற்றும் அதன் மூன்று துணைக் கப்பல்களான – USS மஹான் (DDG-72), USS பெய்ன்பிரிட்ஜ் (DDG-96), USS வின்ஸ்டன் எஸ். சர்ச்சில் (DDG-81) – கடந்த வாரம் சூயஸ் கால்வாயைக் கடந்தன.
ஃபோர்டு கேரியர் ஸ்ட்ரைக் குரூப், ஈரானுக்கு எதிரான 'ஆபரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரிடப்பட்ட நடவடிக்கையின் இரண்டாவது வாரத்தை நிறைவு செய்கிறது. இந்தக் கப்பலின் கடற்பயணம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அதன் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரானுடன் போர் ஏற்படும் அபாயம் உருவான நிலையில், பென்டகன் கடந்த மாதம் இந்தக் கப்பலின் பயணக் காலத்தை நீட்டித்து, மத்திய கிழக்குக்கு அனுப்பியது.
ஃபோர்டு கப்பலின் கடற்பயணம் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடித்தால், வியட்நாம் போருக்குப் பிந்தைய மிக நீண்ட 294 நாள் கடற்பயண சாதனையை முறியடிக்கும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications