ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!
சென்னை: மத்திய கிழக்கில் போர்ப் மேகங்கள் கருத்துச் சூழ்ந்துள்ள நிலையில், 'ஹார்முஸ் ஜலசந்தி' (Strait of Hormuz) இப்போது உலகப் பொருளாதாரத்தின் கழுத்தை நெரிக்கும் ஒரு மரணக் கயிறாக மாறியிருக்கிறது. ஈரானின் 16 கண்ணிவெடி கப்பல்களை அமெரிக்கா அடித்துத் துவம்சம் செய்துள்ள செய்தி, ஒரு பெரிய விபரீதத்தின் ஆரம்பப்புள்ளி என்கிறார்கள் சர்வ்தேச அரசியல் நோக்கர்கள்.

என்ன நடக்கிறது ஹார்முஸ் ஜலசந்தியில்?
உலகின் 20% கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு செல்லும் மிகக்குறுகிய பாதை இது. வெறும் 33 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்தப் பாதையை அடைத்தால், ஒட்டுமொத்த உலகமும் இருளில் மூழ்கும் என்பது ஈரானின் கணக்கு. இதற்காக ஈரான் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் - கடல் கண்ணிவெடிகள் (Naval Mines).
ஏன் இந்த கண்ணிவெடிகள் ஆபத்தானவை?
ஈரான் தனது அதிவேகப் படகுகள் மூலம் இந்தப் பாதையில் ரகசியமாக கண்ணிவெடிகளைத் தூவி வருகிறது.
கண்ணுக்குத் தெரியாத எமன்: இவை கடலுக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் பதுங்கியிருக்கும். ஒரு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் இதன் மேலே செல்லும்போது, அதன் காந்த விசை (Magnetic Signature) அல்லது அழுத்தத்தை உணர்ந்து தானாகவே வெடிக்கும்.
மீட்பது கடினம்: ஒருமுறை கண்ணிவெடி தூவப்பட்டால், அதை அகற்றுவது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதற்குச் சமம். அமெரிக்க கடற்படை ஒரு பாதையைச் சுத்தம் செய்தாலும், அடுத்த ஒரு மணிநேரத்தில் ஈரான் மீண்டும் அங்கு புதிய கண்ணிவெடிகளைத் தூவிவிட முடியும்.
உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள்:
விலைவாசி உயர்வு: ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $120-ஐத் தொட்டு, தற்போது $90 நிலைக்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இது நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும்.
காப்பீட்டுச் சிக்கல்: கடலில் கண்ணிவெடி இருக்கிறது என்று தெரிந்தாலே, கப்பல்களுக்கான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கையை விரித்துவிடுகின்றன. இதனால் கப்பல் போக்குவரத்து 70% வரை குறைந்துவிட்டது.
உணவுத் தட்டுப்பாடு: வெறும் எண்ணெய் மட்டுமல்ல, உலக நாடுகளுக்குத் தேவையான உரங்கள் (Fertilizers) பெருமளவில் இந்தப் பாதை வழியாகவே வருகின்றன. இது விவசாயத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மீட்க முடியாத சிக்கல் (The Irreversible Trap):
ஏன் இந்தப் பாதையை உடனடியாகத் திறக்க முடியாது? கடலில் வீசப்படும் இந்த 'சைலன்ட் கில்லர்கள்' ஒரு உளவியல் ரீதியான அச்சத்தை உருவாக்குகின்றன. "கடலில் ஒரே ஒரு கண்ணிவெடி மிஞ்சியிருந்தாலும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கப்பலை யாரும் அந்தப் பாதையில் ஓட்டத் துணியமாட்டார்கள்." இந்த அச்சமே ஹார்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக மூடிய நிலைக்குக் கொண்டு செல்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "ஈரான் இதற்குப் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளார். மார்ச் மாதத்தின் இந்தப் போர் சூழல், உலகை எந்தப் பக்கம் கொண்டு செல்லப்போகிறது என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஈரான் போர் முடிவுக்கு வருகிறது! திங்கட்கிழமைக்குள் விடிவுகாலம்.. முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய'ரீசெட்'! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கப்பலேறிய மானம்! அமெரிக்க வங்கியில் காப்பீட்டு ஆவணத்தில் ₹950 கோடி? மகேந்தர் மகிஜனி சிக்கியது எப்படி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'!












Click it and Unblock the Notifications