விமானம் பாதை மாறி சென்றதாக தகவல்...
மார்ச் 9: தாய்லாந்தின் வளைகுடா பகுதியில் சில பொருட்கள் கிடப்பதை வியட்நாம் குழுவினர் கண்டுபிடித்தனர். ஆனால், எம்ஹெச்370 உடன் தொடர்பில்லாத பொருட்கள் அவை என தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க போயிங் ரக விமான பிரதிநிதிகள் மலேசியாவிற்கு உதவிக்கு சென்றனர். விமானம் பாதை மாறி சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 10:
தெற்கு சீன கடல் வரை தேடுதல் பணியை மலேசிய அரசு விரிவுபடுத்தியது. ஹாங்காங் அருகே விமானத்தின் சிதைவடைந்த பொருட்கள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தை அடுத்து கப்பல்களையும் அனுப்பியது.

மார்ச் 11:
வியட்நாம் கடற்கரை பகுதியில் விமான சிதைவு பொருட்கள் கிடக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் கிழக்கு நோக்கி விரிவுபடுத்தப்பட்டது.
திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்தவர்களால் தீவிரவாத செயல் நடக்கவில்லை என்று மலேசியா மற்றும் இண்டர்போல் அதிகாரிகள் கூறினர்.
மார்ச் 12:
கடத்தல் நடந்திருக்கும் என்பதன் அடிப்படையில் குற்ற விசாரணை நடைபெறுவதாக மலேசியா கூறியது.
ஆனால், கடைசி சிக்னலுக்கு அடுத்து விமானம் மேற்கு நோக்கிய திரும்பியது என்றும், மலேசிய அரசு தேடுதல் பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் வியட்நாம் கூறியது.
மார்ச் 13:
ரேடார் கருவி தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் பாதை மாறி சென்றதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் இடிபாடுகள் குறித்து தேடுதல் பணி மாறியது.
தென் சீன கடல் மற்றும் தாய்லாந்து வளைகுடா இடையே மிதக்கும் பொருட்கள் இருப்பதாக சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டின. அவை விமான பாகங்கள் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்தது.
மார்ச் 14:
மலேசிய அரசு விமானிகள் மீது சந்தேக பார்வையை செலுத்தியது. அதேவேளையில், தேடுதல் பணியை பார்வையிடுவதற்காக பிரதமர் நஜீப் ரசாக் தனது கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கான பயணத்தை தள்ளி போட்டார்.
மார்ச் 15:
ஆஸ்திரேலிய பகுதியை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் சென்றதாக செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றங்கள் வழியே கண்டறியப்பட்டது.
விமானிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. விமானம் உள்நோக்கத்துடன் திசை திருப்பப்பட்டு உள்ளது என்று புதிய தகவல் தெரிவிப்பதாக பிரதமர் நஜீப் தெரிவித்தார்.
மார்ச் 16:
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்பும் கிட்டத்தட்ட 7 மணிநேரம் விமானம் இயங்கியுள்ளதாக செயற்கைக்கோள் சிக்னல்கள் தெரிவித்தன.இதனால், தேடுதல் வேட்டை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு மாற்றப்பட்டது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications