239 பேரின் உயிரை பறித்த மலேசிய விமானம்: இந்தியப் பெருங்கடலில் விழுந்து நொறுங்கியது உறுதி...
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தைப் பற்றி நாளுக்கு நாள் வித்தியாசமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்செய்தி கிட்டத்தட்ட 239 குடும்பங்களை மட்டும் அல்லாமல் உலக அளவில் அனைத்து நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த 8 ஆம் தேதி அன்று காணாமல் போன எம்ஹெச்370 பற்றிய தகவல்கள் இன்று வரை பட்டியல் இடப்பட்டுள்ளன.

மார்ச் 8:
12.41 மலேசிய விமானம் 239 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு புறப்பட்டது.
1:07 "அக்ரோனிம் அகார்ஸ்" என்ற தகவல் பரிமாற்ற கருவி வழியே போயிங் ரக எம்ஹெச்379 விமானத்தின் கடைசி தகவல் பரிமாற்றம்
1:19 விமானி அறையில் இருந்து கடைசி தகவல் வந்தது "குட் நைட்" என்று.
விமானம் மலேசிய வான்பரப்பில் இருந்து விலகி தாய்லாந்து வளைகுடா பகுதிக்கு மேலே வியட்நாம் நோக்கி பயணிக்கிறது.
1:21 ரேடார் தகவல் நிறுத்தப்பட்டுவிட்டது.
1:37 அதன்பின் வரவேண்டிய தகவல் வரவில்லை.
2:15 மலேசிய தீபகற்பத்திற்கு மேற்குப் பகுதியில் விமானம் ஒன்று பறப்பதை மலேசிய ராணுவ ரேடார் கருவி கண்டறிகிறது.
6:30 பீஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் சென்று சேர்ந்திருக்க வேண்டும்.
7:39 மலேசிய விமானத்திற்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக சீனாவின் சின்குவா செய்தி கழகம் தகவல் வெளியிட்டது. விமானத்தில் முக்கால் வாசிப் பேர் சீன பயணிகள்.
8:11 மணி அளவில் விமானத்தில் இருந்து வந்த கடைசி சிக்னல் கண்டறியப்படுகிறது.
திருட்டு பாஸ்போர்ட்டில் இரு பயணிகள் விமானத்தில் சென்றது கண்டறியப்பட்டதால், தீவிரவாத செயல் நடைபெற்றிருக்க கூடும் என கருதப்பட்டது.












Click it and Unblock the Notifications