பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக சார்பில் தேமுதிகவின் சுதீஷ் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இதன் அடுத்தக்கட்டமாக தேமுதிகவிற்கு, திமுக இன்னொரு 'சர்ப்ரைஸ்' கொடுத்துள்ளது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் செம ஹேப்பியாகி உள்ள அதேவேளையில் காங்கிரஸ்க்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி விஜயகாந்தின் தேமுதிக கட்சி திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் இணைந்ததுமே அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது. அதில் தேமுதிகவின் சுதீஷ் களமிறங்கி போட்டியிட்டு ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி உள்ளது.

பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கே ராஜ்யசபா சீட்டை திமுக வழங்க தயங்கும் நிலையில் தேமுதிகவிற்கு முதல்வர் ஸ்டாலின் தாராளம் காட்டினார்.
அதுமட்டுமின்றி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தேமுதிக வெறும் 0.43 சதவீத ஓட்டுகளை மட்டுமே விஜயகாந்தின் தேமுதிக பெற்றிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் தேமுதிகவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ராஜ்யசபா சீட் வழங்கினார். அதுமட்டுமின்றி தேமுதிகவிற்கு 6 முதல் 8 சட்டசபை தொகுதிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தேமுதிகவிற்கு அடுத்த 'சர்ப்ரைஸ்'
இதுவும் கூட்டணி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த தேர்தலை விட ஒரு சீட் குறைத்து தலா 5 மட்டுமே வழங்குவதாக திமுக கம்யூனிஸ்ட் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளது. அதேபோல் தான் மதிமுகவிற்கும் கடந்த முறை 6 வழங்கப்பட்ட நிலையில் அதைவிட குறைவாக தான் வழங்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது. விசிக சார்பில் கடந்த முறையை விட கூடுதல் சீட் திமுகவிடம் கோரப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் நம்பர் முடிவாகவில்லை.
இப்படியாக திமுக தன்னுடன் இருக்கும் கூட்டணி கட்சிகளை விட தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது தேமுதிகவிற்கு இன்னொரு இன்பஅதிர்ச்சியை திமுக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கூட்டணியில் தேமுதிகவிற்கு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியை ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் வென்ற தொகுதி
இந்த தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2006 தேர்தலில் விஜயகாந்த் முதல் முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் தான் களமிறங்கி வெற்றி பெற்றார். விஜயகாந்த் 61,337 ஓட்டுகள் வாங்கி பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை (பெற்ற வாக்குகள் 47,560 ) 13,777 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அதன்பிறகு 2011ல் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதிக்கு மாறினார். விஜயகாந்திற்கு பதில் தேமுதிக சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் வி முத்துக்குமார் போட்டியிட்டு 72,902 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்த காங்கிரஸ் வேட்பாளர் நீதி ராஜன் 59,261 வாக்குகள் மட்டுமே பெற்று 13,641 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2026ல் மீண்டும் வி முத்துக்குமார் தேமுதிக சார்பில் போட்டியிட்ட நிலையில் வெறும் 18,563 வாக்குகள் மட்டுமே பெற்று 4வது இடம் சென்றார். அந்த தேர்தலில் அதிமுகவின் கலைச்செல்வன் வெற்றி பெற்றார். அவர் பெற்ற ஓட்டுகள் 72,611 ஆகும்.
பிரேமலதா போட்டியிட்டு தோல்வி
பிறகு 2021 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார். குறிப்பாக 3வது இடத்துக்கு பிரேமலதா விஜயகாந்த் தள்ளப்பட்டார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 77,064 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் கார்த்திகேயன் 76,202 வாக்குகள் வாங்கி 862 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் பிரேமலதா 25,908 வாக்குகள் வாங்கி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மீண்டும் பிரேமலதா?
இந்நிலையில் தான் தற்போது விருதாச்சலம் தொகுதி தேமுதிகவிற்கு வழங்க திமுக முடிவு செய்துள்ளது. இதனால் இந்த முறை பிரேமலதா விஜயகாந்த் இந்த தொகுதியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொகுதியை எடுத்து கொண்டால் வன்னியர்கள் ஓட்டுகள் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்.
தற்போது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இது வன்னியர்களின் ஓட்டுகளை பிரிக்கும். அதேபோல் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தான் உள்ளது. இதனால் எளிதாக வெற்றி பெறலாம் என்று பிரேமலதா கணக்கு போட்டு இந்த தொகுதியை திமுகவிடம் கேட்டு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு அடி
இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் சட்டசபை தொகுதிகளை காங்கிரஸ் கோரி உள்ளது. அந்த வகையில் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன் உள்ளார்.
மீண்டும் அவர் தேர்தலில் களமிறங்க தயாராகி வரும் நிலையில் அந்த தொகுதியை திமுக, தேமுதிகவிற்கு வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி.. தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு! -
தேமுதிக களம் காணும் விருத்தாசலம், விருதுநகர் உள்பட 10 தொகுதிகள் எவை? சுதீஷ் முகம் முழுக்க சிரிப்பு! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications