சிரியாவில் ‘சம்பவம்’ செய்த அமெரிக்கா.. வான்வழி தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் பலி!
டமாஸ்கஸ்: சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் இந்த மாதம் நடத்திய வான்வழி தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், வடமேற்கு சிரியாவில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க இராணுவம், சிரியாவில் இந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவம் செப்டம்பர் மாத தொடக்கம் முதல் சிரியாவில் தாக்குதலை மேற்கொண்டனர். அதில், செப்டம்பர் 16 ஆம் தேதி மத்திய சிரியாவில் உள்ள ஒரு ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி முகாம் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் நான்கு சிரிய பயங்கரவாத குழு தலைவர்கள் உட்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் மற்றும் சிரியாவை தளமாகக் கொண்ட ஹுராஸ் அல்-தின் என்ற அல் கொய்தாவின் துணை அமைப்பின் பல மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் இறந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா இதுகுறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், தாக்குதல்கள் செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வான்வழித் தாக்குதல் அமெரிக்காவுக்கும், நமது கூட்டாளிகளுக்கும் நலன் பயக்கும். நமக்கும் நமது கூட்டாளிகளுக்கும் எதிராக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் திறனை சீர்குலைக்கும் என்று அமெரிக்க இராணுவ அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 2014 ஆம் ஆண்டில் ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் பகுதியை கைப்பற்றியது. சிரியாவில் மீண்டும் இதுபோன்று நடைபெறாமல் தடுக்க, அங்கு சுமார் 900 அமெரிக்க வீரர்கள் உள்ளனனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான ஒப்பந்த ராணுவ வீரர்களும் உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இந்த ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
-
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்.. 2 சொந்த போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய அமெரிக்கா.. என்ன நடந்தது? -
ஈரான் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்கா.. டீப் பகுதிக்குள் சென்று வீரரை மீட்டது எப்படி? ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம் -
விடிய விடிய தேடுதல்.. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தின் பைலைட் மீட்பு! அமெரிக்கா நிம்மதி -
அமெரிக்க கடற்படையின் ‘புதிய வேட்டைக்காரன்’.. அணு ஆயுதத்தோடு களமிறங்கும் USS நியூ ஜெர்சி.. ஏன்? -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க












Click it and Unblock the Notifications