பல்லை கடித்துக்கொண்ட நெதன்யாகு.. அமெரிக்க நெருக்கடியால் போர் நிறுத்தத்திற்கு சம்மதமாம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: காசா-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியில், ஏற்கெனவே ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

காசாவை முழுமையாக கைப்பற்றுவோம் என்று இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியிருந்தார். இது மத்திய கிழக்கில் ஏற்கெனவே இருந்த பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான திட்டத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தது. இந்த திட்டத்தை சமீபத்தில் ஹமாஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால் இஸ்ரேல் வாய் திறக்காமல் இருந்தது.

Israel Hamas Gaza

போர் நிறுத்த திட்டம்

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக நெதன்யாகு கூறியிருப்பதாக இஸ்ரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. ஹமாஸ் வசம் பணய கைதிகளாக இருக்கும் தங்கள் உறவினர்களை மீட்க வேண்டும் என்று இஸ்ரேலிய மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை நேற்று சந்தித்து பேசிய நெதன்யாகு, அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டோம் என கூறியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

இருப்பினும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகமோ, நெதன்யாகுவோ இது குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டிருக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியிருக்கிறார். இந்த ஒப்பந்தத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது? என்பது குறித்து வெள்ளை மாளிகை விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.

ஒப்பந்தம் என்ன சொல்கிறது

ஆனால், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் 60 நாட்களுக்கு போர் நிறுத்தப்படும். அதேபோல ஐநா வழிகாட்டுதலின்படி, மனிதாபிமான உதவிகளும் காசாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் ஹமாஸ் தரப்புக்கும் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அதாவது, இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய படைகள் திரும்ப பெறப்படுவது குறித்து எந்த அம்சமும் குறிப்பிடப்படவில்லை. எனவே இது இஸ்ரேலுக்கு சாதகமான ஒப்பந்தமாக இருக்கிறது என விமர்சித்திருந்தது.

பட்டினியும் பஞ்சமும்

போர் ஒரு பக்கம் இருந்தாலும், காசா மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பது சர்வதேச அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த உதவிகள் இல்லாமல் சுமார் 20 லட்சம் மக்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காசாவின் மொத்த மக்கள் தொகையே 23 லட்சம்தான். இதில் ஏற்கெனவே 53,000க்கும் அதிகமானவர்கள் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். மீதமுள்ள மக்களையாவது உயிருடன் பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இஸ்ரேலின் பிடிவாதம்

இந்த விஷயத்தில் இஸ்ரேலின் நிலைப்பாடு ஒன்றுதான். ஹமாஸ் அமைப்பை கலைக்க வேண்டும். அவர்கள் காசாவிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும். அல்லது நிராயுதபாணியாக மாற்றப்பட வேண்டும். காசா முழுவதும் இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். இது நடந்ததால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என்று நெதன்யாகு கூறி வருகிறார்.

சண்டை ஏன்?

கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை தொடங்கியது. இதில் பலர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் கொடூர போரை மேற்கொண்டிருக்கிறது. போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+