ஈரான் யுரேனியம் எங்கே போனது? எங்ககிட்ட தகவல் ஏதும் இல்லீங்க.. கைவிரித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை
வாஷிங்டன்: ஈரான் அணு ஆய்வு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த யுரேனியம் எங்கு போனது? என்று கேள்வி எழுந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், நாங்கள் நடத்திய தாக்குதலில் அது அழிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க நினைக்கிறது. எனவே நாங்கள் அதன் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்று சொல்லி, அந்நாட்டின் மூன்று அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. ஆனால், அணு குண்டு தயாரிக்க தேவையான பொருள் யுரேனியம். ஈரான் ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டிருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை காணவில்லை.

இந்த விவகாரம் குறித்து பேசியிருந்த டிரம்ப், "அதெல்லாம் ரொம்ப வெயிட். வேறு இடத்திற்கு கொண்டு செல்வதும் ரொம்ப டேஞ்சர். எனவே, நாங்க நடத்திய தாக்குதலில் அது மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கும்" என்று கூறியிருந்தார். ஆனால், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெகெசெத், "ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக நகர்த்தியது குறித்து எந்த உளவுத் தகவலும் தனக்குத் தெரியாது" என்று ஓபனாக பேசியுள்ளார்.
அதாவது அமெரிக்க உளவுத்துறையிடம், ஈரானின் யுரேனியம் குறித்து எந்த தகவலும் கிடையாது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னதாக, ஈரானின் மூன்று அணு ஆலைகளில் முக்கியமானதாக கருதப்படும் ஃபார்டோவ் ஆலையிலிருந்து சில பொருட்கள் வெளியே சென்றிருக்கின்றன. மாக்சர் செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள் எதையோ எடுத்து சென்றிருக்கின்றன. இது யுரேனியமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
யுரேனியம் ஒரு இரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டதாக மூத்த ஈரான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இது செயற்கைக்கோள் படங்களுக்கு கூடுதல் ஆதாரங்களை சேர்க்கிறது. சிறிய டப்பாக்களில் அடைத்து யுரேனியத்தை கொண்டு செல்ல முடியும். இப்படி செய்தால் அதை கண்டுபிடிப்பது கஷ்டம் என்று அணு ஆய்வு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் அணு ஆய்வில் பல ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதாக டிரம்ப் கூறினார். இதை மறுக்கும் விதமாக அமெரிக்க உளவு அமைப்பிலிருந்து சில தகவல்கள் கசிந்திருந்தன. ஒரு சில மாதங்கள் மட்டுமே ஈரான் பின்னுக்கு போய் இருக்கிறது என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பதறிய அமெரிக்கா, உடனடியாக இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தது. ஆதாரம் இல்லை என்று சொன்ன இதே பீட் ஹெகெசெத், ஈரான் தாக்குதலில் "வரலாற்று ரீதியாக நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ஆக மொத்தம், அமெரிக்க அதிபர் சொல்வதற்கும், அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் சொல்வதற்கும் சுத்தமாக சம்பந்தமே இல்லை. இதைவிட முரண்பட்ட விஷயம் என்னவெனில், அமெரிக்க உளவுத்துறையிலிருந்து வெளியான தகவல்கள்தான்.
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications