பெட்ரூமில் மனைவியுடன் இருந்தபோது நுழைந்த அமெரிக்க படை.. வெனிசுலா அதிபர் கைதின் ஷாக் பின்னணி
கராகஸ்: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோரை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. போர் கப்பலில் இருவரும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இந்நிலையில் தான் வெனிசுலா அதிபர் தனது மனைவி சிலியா ஃப்ளோரஸ் உடன் பெட்ரூமில் இருந்தபோது அமெரிக்க படையினர் உள்ளே நுழைந்து இருவரையும் இழுத்து சென்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா - வெனிசுலா இடையே கடந்த சில வாரங்களாக மோதல் அதிகரித்தது. வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக மக்களை வெனிசுலா அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதுதான் இருநாடுகள் இடையேயான பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் அமெரிக்க சிறப்பு படையினர் அமெரிக்கா. வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை நேற்று கைது செய்தனர். வெனிசுலா தலைநகர் கராகஸை குறிவைத்து அமெரிக்காவின் போர்விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. மொத்தம் 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் நள்ளிரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இறுதியாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் இருவரும் கைது செய்யப்பட்டது எப்படி? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அமெரிக்க படைகள் போர் விமானங்கள் உதவியுடன் தாக்குதல் நடத்தியபோது வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தனது மனைவி சிலியா ஃப்ளோரஸ் உடன் பெட்ரூமில் இருந்தார். ஃபோர்ட் டியூனா (Fort Tiuna)ராணுவ தளத்தின் வளாகத்தில் நிகோலஸ் மதுராவின் சொகுசு பங்களா உள்ளது. இந்த இடம் தலைநகர் கராகஸ் அருகே அமைந்துள்ளது.
இங்குள்ள பங்களாவின் பெட்ரூமில் அவர் தனது மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் உள்ளே நுழைந்த அமெரிக்க படை அவர்கள் 2 பேரையும் சிறை பிடித்தது. பெட்ரூமில் இருந்து இருவரையும் தரதரவென இழுத்து சென்று கைது செய்தது.
நிகோலஸ் மதுரோவின் சொகுசு பங்களா ராணுவ பாதுகாப்பில் இருக்கும். இதனால் அங்கு அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு அரணை உடைத்தனர். அதன்பிறகு தான் அமெரிக்க படையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். நிகோலஸ் மதுரோவிற்கு அமெரிக்காவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதனால் அவர் மிகவும் பாதுகாப்பாக இருந்தார்.
அவரது சொகுசு பங்களா யாராலும் நெருங்க முடியாது. 24 மணிநேரம் ராணுவ பாதுகாப்பில் இருந்தது. மேலும் அவரது பெட்ரூம் என்பது உடைக்க முடியாத எஃகு கதவை கொண்டுள்ளது. ஆனால் அதை எல்லாம் கடந்து தான் அமெரிக்க படையினர் அவரையும், அவரது மனைவியும் தூக்கி உள்ளனர்.
இந்த ஆபரேஷனை அமெரிக்காவின் சிறப்பு படை பிரிவான டெல்டா ஃபோர்ஸின் வீரர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அவர்கள் தான் இருவரையும் கைது செய்தனர்.வெனிசுலாவில் இருந்து USS Iwo Jima போர்க்கப்பலில் அமெரிக்கா அழைத்து செல்லப்படும் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த வழக்குகளை எதிர்கொள்ள உள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் நிகோலஸ் மதுரோ கைவிலங்கு மாட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு அழைத்து செல்லப்படும் போட்டோவை டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
அமெரிக்க தாக்குதலால் பற்றி எரிந்த கப்பல்! நடுக்கடலில் தவித்த இந்தியர்கள் பத்திரமாக மீட்பு..திக் திக் பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications