அமெரிக்க அரசு முடக்கம் - நாள் 3: அரசியல்வாதிகள் கூடிப் பேசி விட்டு கலைந்தனர்!
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அரசு மூன்றாவது நாளாக தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் பணிகள் தேக்கமடைந்துள்ளன.
அரசுத் துறை தேசிய பூங்காக்கள், அருங்காட்சியங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வாஷிங்டன் டவர், சுதந்திர தேவி சிலை, அமெரிக்க ஜனாதிபதிகள் உருவ மாபெரும் சிற்பம் வடிவமைக்கப்பட்ட ரஷ்மோர் மலை காட்சியகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களுக்கு வேலை குறைப்பு மட்டுமல்லாமல், அமெரிக்கா முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களை நம்பியிருக்கும் தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.
அதி முக்கியமாக அமெரிக்க உளவுத்துறை செயல்பாடுகளையும் வெகுவாக பாதித்துள்ளது. அரசு இணையத்தளங்களில் முடக்கம் குறித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒபாமாவுடன் கூடிப் பேசிய அரசியல்வாதிகள்
ஒண்ணும் இல்லாததை ஊதிப் பெருசாக்கி விட்டு, இப்போ யார் விட்டுக்கொடுப்பது என்ற பெரும் அரசியல் சண்டையாக இந்த 'அரசு முடக்கம்' மாறி விட்டது.

நிறுத்தினால்தான்
ஒவ்வொரு சட்ட்த்தையும் தனித்தனியாக விவாதித்து முடிவெடுப்போம் என்பது ஒபாமா மற்றும் அவரது ஜனநாயகக் கட்சியினரின் வாதம். ஒபாமா கேர் மருத்துவ காப்பீடு திட்டத்தை நிறுத்தினால் தான், அரசாங்க அன்றாட செலவுகளுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றுவோம் என்பது குடியரசுக் கட்சியினரின் பிடிவாதம். இந் நிலையில் இன்று அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் இரு கட்சியினரும் சந்தித்து பேசினர்.

'ஒபாமா கேர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை'
அதிபர் ஒபாமா, 'மருத்துவ காப்பீடு திட்டத்தை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டம், உச்ச நீதிமன்றத்திலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு சில தீவிர வலதுசாரி கட்சிக்காரர்களின் விருப்பத்திற்கேற்ப இப்படிப்பட்ட மிரட்டல் போக்குக்கு இடம் கொடுக்க முடியாது. ஒபாமா கேர் திட்டத்தில் மாறுதல் தேவை என்றால் தனியாக சட்டத் திருத்தம் கொண்டு வரலாம். ஆனால் முதலில் அரசாங்கத்தை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இந்த செலவீனங்கள் ஏற்கனவே அவைகளில் ஒப்புதல் பெறப்பட்டவை ஆகும். தற்போது நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்பதை ஏற்பதிற்கில்லை. மேலும் இப்படிப்பட்ட மிரட்டல்களுக்கு பணிந்து விட்டால், இது ஒரு மோசமான முன்னுதாரணமாகிவிடும். அடுத்தடுத்த அதிபர்களுக்கு அரசை நடத்துவது சாத்தியமில்லாமல் போய்விடும்' என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

விட்டுக்கொடுக்காத குடியரசுக் கட்சியினர்
எதிர்க்கட்சி தலைவர் ஜான் பேனர், ஒபாமா கேர் திட்டத்துக்கு பண ஒதுக்கீட்டை நிறுத்த ஒப்புக் கொண்டால்தான், அரசு செலவினங்களுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டார். மேலும் ஒபாமா தான் பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.

பேனர்தான் முட்டுக்கட்டை...
ஆளுங்கட்சி செனட் அவைத் தலைவர் ஹாரி ரீட், இதை கடுமையாக மறுத்ததோடு, ஜான் பேனர் தான் பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டையாக் இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

இதை வச்சுத்தான் பொழப்பு நடத்துறேன்... தம்பி...
தம்பிக்கு எந்த ஊரு படத்தில் 'இதை வச்சுத்தான் பொழப்பு நடத்துறேன்னு' என்னத்தே கண்ணையா ஒரு யானையைக் காட்டி திரும்ப திரும்ப சொல்லுவதைப் போல், ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி விட்டு எந்த முடிவுக்கும் வராமல் கலைந்து சென்றனர்.

சூப்பர் ஹிட்டான ஒபாமா கேர்
அரசு முடக்கத்தால், பொது மக்கள் அனைவரும் குடியரசுக் கட்சியினர் மீது கடும் கோபத்தோடு இருக்கின்றனர் (இது ஒருவகையில் எதிர்ப்பார்க்கப்பட்டதே!). இன்னொரு பக்கம் அக்டோபர் 1 ம் தேதி அமலுக்கு வந்த ஒபாமா கேர் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளிலேயே 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இணையதளத்திற்கு வருகை தந்துள்ளனர். 4.7 மில்லியன் மக்கள் அரசு ஹெல்த்கேர் தளத்திற்கு மட்டும் வந்துள்ளனர். நாடெங்கிலும் பரவலான வருகையால், இணையதளம் சில மணி நேரங்கள், எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி விட்டன (அதே நேரம் அரசின் மற்ற இணையதளங்கள் முடங்கியுள்ளன!).

மீசையில் மண் ஒட்டாம சமாதானம் கிடைக்குமா?
ஒபாமாவுக்கு ஆதரவு பெருகி வருவதைப் பார்த்து வரும் குடியரசுக் கட்சியினர், எப்படியாவது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் எதையும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. மாறாக பழியை ஆளுங்கட்சி மீதும் ஒபாமா மீதும் தள்ளிவிடும் வகையில் யோசித்து வருகின்றனர்.
ஒட்டு மொத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல், தங்களுக்கு தேவையான தனித்தனி திட்டத்திற்கு, தனித்தனி மசோதா தாக்கல் செய்ய முயற்சி செய்கின்றனர். இதைக் கேள்வியுற்ற ஒபாமா, அப்படி வரும் மசோதாக்களுக்கு என் பேனா ஒரு போதும் ஒப்புதல் வழங்காது என்று சொல்லி விட்டார்.

ஓட்டு அரசியல்தான்
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல், பழியை எதிர்ப்பக்கம் தள்ளி விட்டு தப்பிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியும், முழுப்பழியையும் எதிர்க்கட்சி மீது போட்டு விட்டு, அடுத்து வரும் தேர்தல்களில் இதை ஓட்டாக மற்றும் முயற்சியில் ஆளுங்கட்சியும் காய் நகர்த்துகின்றன. பாதிக்கப்படுவது என்னமோ அரசு ஊழியர்களும், அப்பாவி மக்களும்தான்.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது உலகப் பெரியண்ணன் அமெரிக்காவின் வாழ்க்கைத் தரம், வசதிகள் ஓஹோவென இருந்தாலும், அரசியல் என்று வந்துவிட்டால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் போங்க!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications