Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா - ஈரான் ரகசிய பேச்சுவார்த்தை சுமூகம்.. அடுத்த சில மணி நேரத்திலயே நடந்த பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அணு ஆயுதத் தடைச் சட்ட விவகாரத்தில் ஈரான் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தருகிறது. இந்த சூழலில அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே டெஹ்ரான் அணுசக்தி திட்டம் குறித்த ரகசிய பேச்சுவார்த்தை ஓமனில் நடந்தது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த சில மணி நேரங்களில் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்திருக்கிறது அந்த வகையில், இந்திய நிறுவனம் உள்பட 15 நிறுவனங்கள், 14 கப்பல்கள் மீது புதிய பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது

கடந்த ஜூன் மாதம் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டு வீசியது. இதில் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அரண்கள் பெரும் சேதமடைந்தன. அதனை தொடர்ந்து ஈரானில் ள்நாட்டுப் போராட்டங்கள் வெடித்துள்ளது.

US-Iran secret talks A major twist occurred within just a few hours

இதனால் அந்நாட்டு அரசு பலவீனமடைந்து உள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஈரான் திணறி வருகிறது. இதனிடையே போராடும் மக்களுக்கு அமெரிக்கா நேரடியாக ஆதரவு தெரிவித்து வருகிறது. மறுபுறம் 'யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன்' என்ற அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஈரானுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் மெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து பதற்றதை தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மிக முக்கியமான ரகசிய பேச்சுவார்த்தை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.

முன்னதாக துருக்கியில் நடைபெறுவதாக இருந்த இந்த பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் கோரிக்கை காரணமாகவே து ஓமனுக்கு மாற்றப்பட்டது. மஸ்கட் சர்வதேச விமான நிலையம் அருகே பிரம்மாண்ட அரண்மனையில் இந்த ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவினர் முதலில் பேச்சுவார்த்தைக்காக அரண்மனைக்கு வந்தனர். அவர்கள் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதியை சந்தித்துப் பேசினர்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அமெரிக்கத் தூதுக்குழுவினர் வந்தார்கள். அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்கள். சுமார் 1.30 மணி நேரம் மீட்டிங் நடந்தது. கூட்டத்தில் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதித்துள்ளனர்.

ஈரானின் அணு உலைகள் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் பற்றி மீண்டும் முறைப்படியான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காவே இந்த சந்திப்பு நடந்துள்ளது. பேச்சுவார்த்தை முடிவில் நிலையான பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதி ஏற்றன. அதற்கான தகுந்த சூழலை உருவாக்க ஆக்கப்பூர்வமான பணிகளை ஓமன் அரசு செய்து வருகிறது. இரு நாடுகளும் இறங்கி வந்துள்ளதால், வளைகுடா பகுதியில் விரைவில் அமைதி திரும்பும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்த சில மணி நேரங்களில் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்திருக்கிறது அந்த வகையில், இந்திய நிறுவனம் உள்பட 15 நிறுவனங்கள், 14 கப்பல்கள் மீது புதிய பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஈரானின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை ரகசியமாக மற்ற நாடுகளுக்கு இந்த நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் கடத்தியதாக கூறி அமெரிக்கா தடையை அறிவித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த எலிவேட் மரைன் மேனேஜ்மெண்ட் என்ற தனியார் நிறுவனம் மீது பொருளாதார தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+