Iran - US Talks: அடுத்த 24 மணி நேரம்.. சவுதி முதல் ஈரான் வரை டென்ஷன்.. பாகிஸ்தான் தலைநகரில் லாக்டவுன்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்கா - ஈரான் இடையேயான முக்கிய பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் தலைநகரின் சில பகுதிகள் கடந்த 3-4 நாட்களாக லாக்டவுன் நிலையில் உள்ளன. ரெட் ஜோன் பகுதியாக அறிவிக்கப்பட்டவை முழுமையாக மூடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த முறை இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை சுமார் 21 மணிநேரம் நடந்த நிலையில், இந்த முறை கட்டாயம் நீண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த 24 - 48 மணி நேரம் ஈரானுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தின் எதிர்காலத்தையும், அமைதியையும் இக்கூட்டம் தீர்மானிக்க உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சத்தில்
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை நடத்தும் செரினா ஹோட்டல் சுற்றியுள்ள முக்கிய பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களைச் சுற்றி கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாடுகள் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறது. இருப்பினும், ஈரான் தரப்பில் கடைசிக்கட்ட முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பது தான் முக்கியமான பிரச்சனையாக உள்ளது. இதனால் 2வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது இன்னும் உறுதியாக இல்லை.
அமெரிக்க அதிகாரிகள் குழு
அமெரிக்க துணை தலைவர் ஜேடி வேன்ஸ் புதன்கிழமை இஸ்லாமாபாத் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேன்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை புறப்பட்டு, புதன்கிழமை காலை அல்லது மதியம் இஸ்லாமாபாத் வருவார் என கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜே வான்ஸ் உடன் அமெரிக்க தரப்பு பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பாகிஸ்தான் வர உள்ளனர்.
பாகிஸ்தானின் முயற்சி
பாகிஸ்தான் அரசு இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவிடம் ஒரு நம்பிக்கை உருவாக்கும் நடவடிக்கையாக ஈரான் துறைமுகங்களுக்கு விதிக்கப்பட்ட கடற்படைத் தடையை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இதுதான் தற்போதைய பேச்சுவார்த்தைக்கு மிகப் பெரிய தடையாக உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பொது கொள்கை வல்லுநர் நிலோபர் அப்ரிடி காசி, "இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. இன்றிரவு அல்லது நாளைக்குள் ஈரான் போர் சற்று அமைதி திசையில் நகர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான விவாதங்கள் நாளுக்கு நாள் கடுமையடைந்து வருகின்றன. இந்த பதற்றம் பேச்சுவார்த்தையின் வெற்றியை சந்தேகத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இருப்பினும், பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி மீடியேட்டர் நாடுகள் தொடர் முயற்சியால் ஈரான் தலைமை பேச்சுவார்த்தை நடத்த இறுதி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் மத்திய கிழக்கில் அமைதி நிலைக்க வாய்ப்பு உருவாகும். எண்ணெய் விலை உயர்வு, விமான போக்குவரத்து சிரமங்கள் போன்றவை குறையும். தோல்வியில் முடிந்தால் பதற்றம் அதிகரிக்கும்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை மத்திய கிழக்கின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக உள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான பதற்றம் இன்னும் தொடர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் பேச்சு நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது தான் இப்போதைய பெரிய கேள்வி.















Click it and Unblock the Notifications