ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்.. சிரியா மீது முழு தாக்குதல்.. ரஷ்யாவுக்கு அமெரிக்கா நெருக்கடி
டமாகஸ்: அமெரிக்க படைகள், 'ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்' நடவடிக்கையின் கீழ், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத இலக்குகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
"போர் வீரர்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேரறுக்கவும், எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும், பிராந்தியத்தில் அமெரிக்க மற்றும் கூட்டாளிப் படைகளைப் பாதுகாக்கவும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றது" என்று அமெரிக்க மத்திய கட்டளைப்படை (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்குத் தீங்கு விளைவிக்க முயலும் பயங்கரவாதிகளைத் அகற்றுவதில் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகள் உறுதியாக இருப்பதாக சென்ட்காம் கூறியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா உள்ளிட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படுவதுதான் சென்ட்காம் ராணுவ பிரிவின் முக்கியமான பணி. அந்த வகையில் நேற்று இந்த தாக்குதலை தொடுத்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு டிச.19ம் தேதி 'ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்' தொடங்கப்பட்டது. முன்னதாக கடந்த டிச.13ம் தேதி, சிரியாவின் பால்மிரா பகுதியில் அமெரிக்க மற்றும் சிரியப் படைகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பழி வாங்கும் விதமாக தற்போது அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது.
தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத படைகளுக்கு சென்ட்காம் கடும் எச்சரிக்கை விடுத்தது. எக்ஸ் தளப் பதிவில் "எங்கள் செய்தி வலுவாக உள்ளது. எங்கள் போர் வீரர்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்தால், நீங்கள் எவ்வளவுதான் தப்பிச் செல்ல முயன்றாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து அழிப்போம்" என தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா நடந்த தாக்குதலில், இருபதுக்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டு, 90-க்கும் அதிகமான துல்லியமான ஆயுதங்கள் மூலம் 35-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவுக்கு நெருக்கடி
ரஷ்யாவுக்கு வெளியில் அதன் ராணுவம் உறுதியாக இருப்பது சிரியாவில்தான். சிரியா, ரஷ்யாவுடன் பல ஆண்டுகளாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, சிரியாவை தொடர்ந்து நட்பு நாடுகளின் பட்டியலில் ரஷ்யா வைத்து வருகிறது. இருப்பினும் அங்கு இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகள், ஆட்சி அதிகாரத்திற்கு எதிரான சவாலாக இருக்கின்றனர். இந்த விஷயத்தை பயன்படுத்தி அமெரிக்காவும் உள்ளே நுழைய முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications