பாலியல் சீண்டல்.. குமுறும் பெண்கள்.. டொனால்ட் ட்ரம்புக்கு 100க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நெருக்கடி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் 100க்கும் மேற்பட்ட எம்.பிக்கள், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளனர்.
இதனால் ட்ரம்புக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி அதிகரித்துள்ளது.

பல பெண்கள்
நாடாளுமன்ற மேற்பார்வை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது இவர்கள் கோரிக்கை. குறைந்தபட்சம் 17 பெண்களாவது ட்ரம்ப் மீது பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

நல்ல நேரம்
ஜனநாயக கட்சியை சேர்ந்த புளோரிடாவை சேர்ந்த எம்.பியும், பெண்கள் பணிக்குழு தலைவருமான லோயிஸ் பிரான்கென் கூறுகையில், இதுதான் உண்மையை வெளியே கொண்டுவர நல்ல தருணம் என்றார்.

100க்கும் மேல்
பிரான்கென் மேலும் கூறுகையில், அதிபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு உள்ள எம்.பிக்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

யாராக இருந்தாலும்
பாலியல் துன்புறுத்தலை ஹாலிவுட் தயாரிப்பாளரோ, ரெஸ்டாரண்ட் சமையல்காரரோ, அல்லது அதிபரோ யார் செய்தாலும் பொறுக்க முடியாது என்றும் அவர் கூறினார். அதேநேரம் இந்த குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் மறுத்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications